17வது ஓவரில் நடுவருடன் தோனி வாக்குவாதம்.. என்ன நடந்தது?

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபயர் ஒன்று போட்டியில் 17வது ஓவரின் போது திடீரென தோனி நடுவரிடம் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் தொடரின் முக்கிய போட்டியான குவாலிஃபயர் ஒன்று போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 172 ரன்கள் எடுத்த நிலையில் 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி விளையாடிக்கொண்டிருந்தது.

அப்போது 17வது ஓவரை வீச பத்திரானாவை தல தோனி அழைத்தார். அப்போது நடுவர் பத்திரானா எட்டு நிமிடங்கள் மைதானத்தை விட்டு வெளியே சென்று இருந்தார் என்றும் அதனால் அவரை பந்துவீச அழைக்க முடியாது என்றும் விதியை குறிப்பிட்டு தோனியிடம் தெரிவித்தார்.

ஒரு வீரர் மைதானத்தை விட்டு வெளியே எத்தனை நிமிடங்கள் சென்றாரோ அதனை நிமிடங்கள் அந்த வீரர் மைதானத்தில் பில்டிங் செய்துவிட்டு தான் பந்து வீச வேண்டும் என்பது ஐபிஎல் விதிகளில் ஒன்றாக உள்ளது. இதனை அடுத்து பத்திரானா மைதானத்தை விட்டு வெளியே சென்று திரும்பி வந்து 7 நிமிடங்கள் தான் ஆகிறது என்றும், அதனால் பத்திரானாவை பந்து வீச அனுமதிக்க முடியாது என நடுவர் கூறினார்.

இதனை அடுத்து தோனி நடுவர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தபோதே அந்த ஒரு நிமிடம் கழிந்து விட்டது, அதனை அடுத்து அவர் தற்போது 8 நிமிடம் ஆகிவிட்டது என நடுவரிடம் கூறியதாகவும் இதனை அடுத்து வேறு வழியின்றி பத்திரானாவை பந்து வீச நடுவர்கள் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த வர்ணனையாளர்கள் நடுவரின் பேச்சைக் கேட்டு வேறு பந்து பேச்சாளரை தான் தோனி அழைத்திருக்க வேண்டும் என்றும் வேண்டுமென்றே வாக்குவாதம் செய்து ஒரு நிமிடம் தாமதம் தடுத்தியது சரியான விளையாட்டு இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் ஒரு போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்ற நிலையில் எந்தவித தந்திரத்தையும் பயன்படுத்தலாம் என்பதுதான் ஒரு கேப்டன் நிலை என்று தோனிக்கு ஆதரவாகவும் சில கருத்து தெரிவித்து வருகின்றனர், இது குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் பகுதியில் தெரிவிக்கவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews