நடிகர் சரத்குமார் வீட்டில என்ன விஷேசம்…!

நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு மும்பை தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ்வுடன் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

varu 3

நடிகை வரலக்ஷ்மி 2012 ஆம் ஆண்டு ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்பு ‘தாரை தப்பட்டை’, ‘சண்டகோழி 2’, ‘விக்ரம் வேதா’, ‘இரவின் நிழல்’ போன்ற படங்களில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இறுதியாக தெலுங்கில் ‘ஹனுமான்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷ் இயக்கத்தில் நடித்து வருவதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்துபவர்.

varu 2

இந்நிலையில் தனது 14 ஆண்டு கால நண்பரான மும்பை தொழில் அதிபர் நிக்கோலய் சச்தேவ்வுடன் நடிகை வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் மும்பையில் கோலாகலமாக குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இருவரும் திருமண தேதியை விரைவில் அறிவிப்பர் என்று குடும்பத்தார் கூறுகிறார்கள். இவர்களுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனது தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு நடுவிலும் நடிகை வரலக்ஷ்மி தமிழ் மற்றும் தெலுங்கில் கமிட் ஆகியிருக்கும் படங்களில் அர்ப்பணிப்போடு நடித்து வருகிறார். தனது அசாத்ய திறமையால் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் குணச்சித்திர நடிகையாக இருந்து வருகிறார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...