இன்று கணவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்கள்…வாங்க வேண்டிய இரு பொருள்களை மறந்துடாதீங்கம்மா..!

இன்று ஆடிப்பெருக்கு (03.08.2022). இந்துப் பண்டிகை களில் இது மிக மிக முக்கியமான நாள். இன்று எதை நினைத்து வேண்டுகிறோமோ அது நிச்சயம் நடக்கும். என்ன பொருள் வாங்குகிறோமோ அது பெருகும் அற்புத நாள். இன்று நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.

கணவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் தினமும் வாங்கலாம். ஆனால் இன்று பெரும்பாலும் இந்த நடைமுறையில் இல்லை. ஆடிப்பெருக்கு தினமாவது இந்த ஆசிர்வாதம் வாங்குவது மிகவும் நல்லது.

ஆடிப்பெருக்கு என்றாலே காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் நாள். விவசாயம் செழிக்கும். இந்த நாளில் விதை விதைப்பாங்க. குடும்பத்தோடு அம்மனை வேண்டுவாங்க. பிரார்த்தனை பண்ணுவாங்க. காவேரி ஆற்றங்கரையில் இருந்து தாலியைப் பெருக்கிக்கொள்வார்கள். இன்று அம்மனிடம் வேண்டும்போது அனைத்தையும் நிறைவேற்றித் தருவாள் என்பது நம்பிக்கை.

gold
Gold

இன்று விலை உயர்ந்த பொருள்களை வாங்க சிறப்பான நலன். அடுத்து வெள்ளி வாங்கலாம். அப்போது தான் அது பெருகிக்கிட்டே இருக்கும். இன்று வாகனங்கள் எடுப்பதும் சிறப்பான பலனைத் தரும். இந்த 3 பொருள்களை வாங்குவதற்கு எங்களிடம் வசதியில்லை என்று சொல்பவர்கள் உப்பு டப்பா முழுவதும் கல் உப்பை வாங்கி நிரப்பினால் போதும்.

turmeric
turmeric

அடுத்து குண்டு மஞ்சள் வாங்கி வைக்க வேண்டும். இந்த இரண்டும் வாங்கி வைத்தால் வீட்டில் செல்வ செழிப்போடும் வறுமை நீங்கியும் இருக்கும். குண்டு மஞ்சள் மகாலட்சுமி அம்சம் பொருந்தியதாக இருக்கும். வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் கிழங்கைத் தான் கொடுத்து வழியனுப்புவாங்க. உங்கள் வீட்டில் வறுமை நீங்கி தன தானியம் பெருகும்.

இது காலம் காலமாக இருந்து வரும் வழிபாடு. அதனால் தான் ஒரு பெண் தங்கத்தில் தாலி போட முடியாவிட்டாலும் கூட மஞ்சள் கிழங்கைக் கயிற்றில் தாலியாகக் கட்டிப் போடுவார்கள். தங்கத்திற்கு இருக்கும் அதே சிறப்பு மஞ்சளுக்கும் உண்டு.

நீங்கள் தங்கத்தை வீட்டில் வாங்கி வைத்து இருக்கும்போது அது எப்படி பெருகி குடும்பத்திற்கு செல்வ செழிப்பைத் தருமோ அதே பலனை மஞ்சள் கிழங்கு வாங்கி வைத்தாலும் உண்டாகும். பெண்கள் அதை முகத்தில் பூசி குளித்து வந்தால் பலவித நோய்கள் நீங்குவதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் வாழ்க்கையிலும் முன்னேற்றம் கிடைக்கும்.

காவேரிக் கரை ஓரங்களில் உள்ள நகர்ப்புறங்களில் இந்தப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும். அதே நாளில் மற்றவர்கள் கொண்டாட வேண்டாம் என்று எண்ணத் தேவையில்லை. தண்ணீர் காவிரியின் அம்சம். அதனால் எல்லோருமே கொண்டாடலாம்.

நாம் உயிர்வாழ அடிப்படைத் தேவைகளில் ஒன்று நீர். அதனால் தான் நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் கூறியுள்ளார். அதனால் இந்த நீருக்கு நன்றி சொல்லும் விதத்தில் இந்தப்பண்டிகையை அனைவரும் கொண்டாட வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.