இவர் படத்திற்கு நாங்கள் தீவிர ரசிகர்கள்… சூர்யா- ஜோதிகா பேட்டி!!

ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றிப் படமாக இருந்த ஆர்ட்டிகிள் 15 படம், அதுமட்டுமின்றி அவர் நடிப்பில் வெளியான அந்தாதூன் படமும் செம ஹிட். அத்துடன் மத்திய அரசின் தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் அந்தப் படத்திற்கு அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது.

மேலும் அவர் நடித்த விக்கி டோனர் படமும் வேற லெவல் என்றே சொல்ல வேண்டும், அந்தப் படம் பாலிவுட்டில் செம ஹிட் கொடுத்ததால்தான் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே ஆகும். அதேபோல் அந்தாதூன் மற்றும் ஆர்ட்டிகிள் 15 இரண்டும் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இவருக்கு கல்லூரி இளைஞர்கள் ரசிகர்கள் என்றாலும், கோலிவுட்டின் பெஸ்ட் கப்புளான இந்த ஜோடியும் ரசிகர்களா? என அனைவரும் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். ஆமாங்க சூர்யா, ஜோதிகாவும் ஆயுஷ்மான் குரானாவின் படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவோம் என்று சமீபத்தைய சமூக வலைதள உரையாடலில் கூறியுள்ளனர்.

இதனைப் பார்த்த ஆயுஷ்மான் குரானா ட்விட்டரில் நன்றி தெரிவித்து ஒரு ட்வீட்டினையும் போட்டுள்ளார்.

Published by
Staff

Recent Posts