ஏர்செல்லை அடுத்து வோடோபோன் மூடப்படுகிறதா? 8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து தவிப்பு..!

இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடோபோன், 8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து விட்டதாகவும் ஏர்செல் நிறுவனத்தை அடுத்து வோடோபோன் நிறுவனமும் மூடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் பார்தி ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் மிகப் பெரிய லாபத்தில் இயங்கி வருகிறது. இரு நிறுவனங்களும் தற்போது தங்கள் பயனாளர்களுக்கு 5ஜி வசதியை செய்து கொடுத்துள்ளது என்பதும் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வோடபோன் நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 1.3 மில்லியன் 4ஜி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும் கடந்த 21 மாதங்களில் மிக கடுமையாக சரிவு ஏற்படுத்துள்ளதாகவும் டிராய் சமீபத்தில் வெளியிட்ட தகவல் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வோடபோன் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் 5ஜி வசதியை கொண்டு வந்தது தான் என்றும் கூறப்படுகிறது.

5ஜி சேவைகள் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தை நோக்கி சென்று விடுவதால் தான் வோடபோன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. 5ஜி தொழில்நுட்பம் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள நிலையில் வோடோபோன் நிறுவனத்தால் வைத்து சேவையை கொடுக்க முடியாதது சந்தாதாரர்களின் இழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

வோடபோனின் 8 லட்சம் வாடிக்கையாளர்கள் வோடபோன் நிறுவனத்திலிருந்து வெளியேறிய நிலையில் அவர்களை கொத்தாக பாரதி ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை தொடருமா அல்லது வோடபோன் விழித்துக் கொண்டு விரைவில் 5ஜி சேவையை வழங்க நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Published by
Bala S

Recent Posts