விகே ராமசாமி ஹீரோவாக நடித்த படம்.. எம்ஜிஆர்-சிவாஜி படங்களுக்கு இணையாக வசூல்..!

பழம்பெரும் நடிகர் விகே ராமசாமி ஏராளமான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்த நிலையில் ஒரு படத்தில் அவர் ஹீரோவாக நடித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா. ஆம் அதுதான் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படம்.

இந்த படம் கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கே விஜயன் இயக்கத்தில்  எம்எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான இந்த படத்தில்  விஜயகுமார் மற்றும் சுமலதா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாலும் இந்த படத்தின் ஹீரோ போல் விகே ராமசாமி தான் நடித்திருப்பார். அவர் சிவபெருமான் வேடத்தில் மிகவும் தத்ரூபமாக காமெடியாகவும் அதே நேரத்தில் நல்ல கருத்தை சொல்லும் கேரக்டரில் நடித்திருப்பார்.

7500 நாடகங்கள்.. பல திரைப்படங்கள்.. நடிகர் காத்தாடி ராமமூர்த்தியின் கலையுலக பயணம்..!

இந்த படத்தில் பூசாரி ஆக நாகேஷ் மற்றும்  பூசாரி மகளாக சுமித்ரா நடித்து இருப்பார்கள்.  ஒரு நாள் பூசாரி முன் திடீரென சிவபெருமான் தோன்றி அந்த ஊரில் நடக்கும் சமூக விரோத செயல்கள் குறித்து கூறுவார். அந்த ஊரில் உள்ள எம்ஆர்ஆர் வாசு மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகிய இருவரும் செய்யும் சமூக விரோத குற்றங்களை தோலுரித்து  பூசாரியிடம் சிவபெருமான் கூற, பூசாரி நாகேஷ் திட்டமிட்டு அந்த இருவரின் சுய ரூபத்தை வெளிப்படுத்துவது  தான் இந்த படத்தின் கதை.

ஆனால் கடைசியில் திடீரென இவை அனைத்தும் பூசாரி கனவு காண்பதாக கூறப்பட்டிருப்பது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படும். இருப்பினும் இந்த படம் முழுவதும் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் இருக்கும் என்பதால் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆனதால் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பாரதிராஜாவின் முதல் நாயகி.. கண்களால் நடிக்கும் நடிகை அருணா..!

ருத்ர தாண்டவம் என்ற பெயரில் விகே ராமசாமி நடத்திய நாடகம் தான் பின்னாளில் திரைப்படமாக உருவானது. விகே ராமசாமியுடன் விஜயகுமார், நாகேஷ்,  சுமித்ரா தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், மனோரமா, எம்ஆர்ஆர் வாசு, ராதாரவி உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் சென்னை வாகினி ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு ஒரே ஷெட்யூலில் படம் முடிக்கப்பட்டது.  புதுமையான கதை மற்றும் நாகேஷ், விகே ராமசாமியின் அற்புதமான நடிப்பு காரணமாக இந்த படம் எம்ஜிஆர்-சிவாஜி படங்களுக்கு இணையான வசூலை பெற்றது.

கடவுள் மனிதனாக பூமிக்கு வந்தால் என்ன நடக்கும் என்ற கற்பனை கதை தான் ருத்ர தாண்டவம். இந்த படம் வெற்றிக்கு பின்னர் பல படங்கள் இதே மாதிரி தமிழில் l வெளியானது. கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் கூட இந்த படத்தின் தழுவல் தான்.

700 படங்களுக்கும் மேல் நடித்த வில்லன் நடிகர்.. 2 படத்தை தயாரித்து பெரும் நஷ்டம்.. எஸ்.வி ராமதாஸ் திரைப்பயணம்..!

விகே ராமசாமி நடித்த ருத்ர தாண்டவம் திரைப்படத்தை ரீமேக் செய்ய கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. விகே ராமசாமி வேடத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இந்த படம் டிராப் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

Published by
Bala S

Recent Posts