எஸ் ஜே சூர்யாவால் விஷாலுக்கு கிடைத்த வெற்றி.. மார்க் ஆண்டனி முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, செல்வராகவன், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஷால் கிருஷ்ணா நடிப்பில் வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்து வந்தன. இந்நிலையில், எப்படியாவது ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்கிற முயற்சியில் தொடர்ந்து போராடி வந்தார் விஷால்.

விஷாலுக்கு விஸ்வாசத்தை காட்டிய ஆதிக் ரவிச்சந்திரன்

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பகிரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏன் தான் நடிக்கிறார், மீண்டும் ஒரு தோல்வி படம் கன்ஃபார்ம் என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் மீது நடிகர் விஷால் வைத்த முழுமையான நம்பிக்கை காரணமாக அந்த விசுவாசத்திற்காக விஷாலுக்கு இப்படியொரு தரமான படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்துள்ளார்.

அஜித் கொடுத்த அட்வைஸ்

நடிகர் அஜித்தின் அறிவுறுத்தலின் பெயரில் தான் தனது டைப் படங்களிலிருந்து மாறுபட்டு அடல்ட் கன்டன்ட் படமாக இல்லாமல் மார்க் ஆண்டனி திரைப்படத்தை அனைவரும் ரசிக்கும் படமாக உருவாக்க நினைத்தேன் என பேட்டிகளில் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றி படமாக மாற காரணமே இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யாவை ஆதிக் ரவிச்சந்திரன் போட்டதுதான் என ஒட்டுமொத்த ரசிகர்களும் தியேட்டரை விட்டு வரும்போது எஸ் ஜே சூர்யா தான் மாஸ் என பாராட்டி வருகின்றனர்.

எஸ்.ஜே. சூர்யா தான் பலம்

பொம்பள சோக்கு கேக்குதா பொம்பள சோக்கு கேக்குதா.. என்கிற காட்சிகள் மற்றும் பேருந்தில் சில்க் ஸ்மிதாவை பார்த்தவுடன் எஸ் ஜே சூர்யா ஆளே மாறி நடிக்கும் நடிப்பு எல்லாம் பார்த்த ரசிகர்கள் அவரை நடிப்பு அரக்கன் என பாராட்டி வருகின்றனர்.

அவரது நடிப்பு தான் இந்த படத்திற்கே மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. நடிகர் விஷாலுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வெற்றி படம் கிடைப்பதற்கும் சூர்யா தான் காரணம் என்கின்றனர்.

முதல் நாள் வசூல்

சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட மார்க் ஆண்டனி திரைப்படம் முதல் நாளில் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளிய நிலையில், அதிகபட்சமாக 6.50 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வீக் எண்டு லாங் வீக் எண்ட் என்பதால் முதல் நான்கு நாட்களிலேயே போட்ட பட்ஜெட்டை தாண்டி அதிக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...