அந்த வீடியோல நடந்து போனது நான் தான், ஆனா.. உண்மையை உடைத்து பேசிய விஷால்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். புரட்சித் தளபதி என்ற பட்டத்தையும் இவருக்கு ரசிகர்கள் கொடுத்துள்ளனர். நடிகர் சங்க பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வரும் விஷால் நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றிருந்தது.

விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி படத்திற்கு முன் அவர் நடித்த நிறைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அப்படி இருக்கையில், மார்க் ஆண்டனி திரைப்படம் அவரது சிறந்த கம்பேக் படமாகவும் அமைந்தது. இதனைத் தொடர்ந்து, தன்னை வைத்து தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள ஹரியின் இயக்கத்தில் அடுத்து விஷால் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ரத்னம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கடுத்து, துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார் விஷால். இதனிடையே, சமீபத்தில் நடிகர் விஷால் பெண் ஒருவருடன் நடந்து போகும் வீடியோ வெளியாகி இருந்தது. இதில் அவர் தன்னை வீடியோ எடுக்கும் கேமராவை பார்த்ததும் அப்படியே அந்த பெண்ணை அழைத்து முகத்தை மறைத்தபடி ஓடி செல்லும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, அதில் இருந்த பெண் யார் என்ற கேள்வியும் நெட்டிசன்கள் மத்தியில் உருவாகி இருந்தது. பலரும் பல விதமான காரணங்களை சொல்ல, தனது வீடியோ குறித்து தற்போது விளக்கமும் கொடுத்துள்ளார் விஷால்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள விஷால், “என்னை மன்னிக்கவும். அந்த வீடியோவில் உள்ள உண்மை என்ன என்பதை சொல்வதற்கான நேரம் வந்து விட்டது. அந்த இருப்பிடத்தின் அடிப்படையியல் பாதி உண்மை தான். எனது உறவினர்களுடன் (Cousins) நான் வழக்கமாக தங்கும் நியூயார்க் தான் அது. ஒவ்வொரு ஆண்டும் நான் செல்லும் ஒரு இடம் கூட.

இந்த வீடியோவின் மற்றொரு பாதி, பிராங்க் (Prank) ஆகும். எனது உறவினர்கள் அனைவரும் (Cousins) இதனை திட்டம் போட்டு செயல்படுத்திய ஒரு விஷயமாகும். இது போன்று நடக்கும் போது எனக்குள் இருக்கும் குழந்தை வெளியே வந்த ஒரு நிகழ்வு தான் அது. இந்த விளக்கத்தை கொடுத்து உங்களின் அனைத்து துப்பறியும் ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறேன். சிலர் இலக்கை நோக்கி களமிறங்கினர். ஆனால், அதில் கடினமான உணர்வுகளும் இல்லை. லவ் யூ ஆல்” என குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.