விருச்சிகம் சனி பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

விருச்சிக ராசி அன்பர்களே சனி பெயர்ச்சியினைப் பொறுத்தரை சனி பகவான் 4 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கின்றார். சந்திரன் நீச்சம் பெற்ற ராசிக்காரர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். நீங்கள் தியானம், யோகா போன்றவை செய்து வந்தால் உங்கள் மீதான தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

தொழில் வாழ்க்கை உங்களுக்குப் பெரிதளவில் கைகொடுப்பதாய் இருக்கும். தொழில் சார்ந்த மாற்றங்களை நீங்கள் செய்வதற்கு ஏற்ற சூழலானது நிலவும். சிறு சிறு பதவிகள் வகித்தவர்களுக்கும் பெரிய அளவிலான பதவி உயர்வு கிடைக்கப் பெறும்.

அர்த்தாஷ்டம சனி இருப்பதால் உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் நிச்சயம் ஏற்படும்; தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், கட்டுப்பாடான உணவினை எடுத்துக் கொள்ளுதல் என்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

பழனி மலையில் உள்ள முருகப் பெருமானை தரிசித்துவிட்டு வருதல் வேண்டும். சுப காரியத் தடைகளை குரு பகவான் பரிபூரணமாக்குவார். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுடன் கோப, தாபங்கள் வேண்டாம்.

தொழில், வியாபாரம் போன்ற விஷயங்கள் ரீதியான கடனுதவிகள் கிடைக்கப் பெறும். பெரிய மனிதர்களைச் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையப் பெறும். உங்களின் செல்வாக்கு அதிகரித்து நீங்கள் பிரபலமாவீர்கள்.

வண்டி, வாகனப் பயணங்கள் செய்யும் போது கவனமாக இருத்தல் வேண்டும். நண்பர்கள் விஷயத்திலும் கவனம் தேவை. முன்பின் தெரியாத மூன்றாம் நபர்களிடத்து மிகவும் நெருங்கிப் பழகாதீர்கள்.

அக்கம்பக்கத்தில் கவனம் தேவை. விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாய்தான் பிரச்சினையாகவே இருக்கும். ஒருவர் பற்றி மற்றவர் கூறும் விஷயத்தினை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள், அதனைப் பரிமாறினால் உங்களுக்குப் பெரும் பிரச்சினையிலேயே முடியும்.

தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. செய்யும் தொழிலில் இடம் சார்ந்த மாற்றங்கள் ஏற்பட்டால் எந்தவித பயமும் கொள்ளாமல் அதனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.