விருச்சிகம் ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

ராகு – கேது பெயர்ச்சியானது அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகின்றது. விருச்சிக ராசி அன்பர்களே! பெயர்ச்சியின்போது யோகக்காரகர் ராகு பகவான் 6 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். ஞானக்காரகரான கேது பகவான் 12 ஆம் இடத்தில் இருந்து 11 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார்.

அறிவு சார்ந்த விஷயங்களில் நீங்கள் தங்கம் போல் ஜொலிப்பீர்கள்; எதையும் மிகவும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்வீர்கள். கேது பகவான் அறிவு மற்றும் திறமையினை பல வகைகளிலும் பலப்படுத்துவார், வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை உங்களின் புத்திக் கூர்மையால் மேல் அதிகாரிகளின் பாராட்டினைப் பெறுவீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் சக பணியாளர்களுடன் இணக்கமான சூழல் ஏற்படும்.  மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக மேம்பட்டுக் காணப்படுவர். பெற்றோர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக குழந்தைகள் நடந்து கொள்வர். மேலும் உயர் கல்வி ரீதியான விஷயங்களில் நற் செய்தி கிடைக்கப் பெறும்.

ராகு பகவான் 5 ஆம் இடத்தில் இருப்பதால் பல வகையான குழப்பங்களை ஏற்படுத்துவார்; எடுக்கும் முயற்சிகளில் எதுவாகிலும் பலவகையான தடைகள் ஏற்படும். ஆற்றல் குறைந்தவராக உணர்வீர்கள்; அதிர்ஷ்டம் இல்லையோ என்ற வருத்த நிலைக்கு ஆளாவீர்கள். எந்தவொரு முடிவினை எடுக்கும்போதும் குழப்ப நிலையிலேயே மனமானது இருக்கும்.

ராகு பகவான் 5 ஆம் இடத்தில் இருந்து உங்கள் உள்ளுணர்வுடன் இணைப்பில் இருப்பார்; அதனால் உள் உள்ளுணர்வினை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.

தெய்வ பக்தியில் ஈடுபடுங்கள்; மேலும் தான, தர்மங்களைச் செய்யுங்கள். ராகு பகவான் திடீர் ஆசை, திடீர் கோபம், வெறுமை என அனைத்தையும் கொடுப்பார். எதிர்காலம் குறித்த பயத்தினை அதிக அளவில் கொடுப்பார்.

உணர்வுகள் அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கும். முடிந்தளவு நேர்மறையான எண்ணங்களை மனதில் விதையுங்கள்; நேர்மறையான மனிதர்களிடம் பேசுங்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

கேது பகவான் உங்களுக்குச் சாதகமாகவும், ராகு பகவான் உங்களுக்குப் பாதகமாகவும் உள்ளனர். அதனால் ராகு பகவானை சாந்தப்படுத்தும் வகையில் பல வகையான நற்காரியங்களையும் செய்யுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews