விருச்சிகம் நவம்பர் மாத ராசி பலன் 2023..!

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்; ராகு- கேது பெயர்ச்சியானது நிகழ்ந்துள்ளது. விருச்சிக ராசியினைப் பொறுத்தவரை செவ்வாய் பகவான் ஆட்சி பெற்ற செவ்வாயாக முதலாம் வீட்டில் இட அமர்வு செய்கிறார்.

செவ்வாய் பகவானுடன் புதன் பகவான்- சூர்ய பகவான் கூட்டணி அமைக்கின்றனர். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இரண்டாம் பாதியில் நீங்கள் நினைத்த மாற்றங்களைச் செய்யலாம். சக பணியாளர்களுடன் சுமூகமான உறவு இல்லை.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

கோபம், வீண் வாக்குவாதம் அலுவலகத்தில் அவப் பெயரினை ஏற்படுத்திக் கொடுக்கும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எடுக்கும் எந்தவொரு முடிவினையும் நவம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியில் எடுங்கள்.

குரு பகவான் 6 ஆம் இடத்தில் உள்ளார்; இதனால் பொருளாதார ரீதியாக பின்னடைவினைச் சந்திப்பீர்கள். பொருளாதாரம் என்று கொண்டால் கைக்கு மீறிய செலவு ஏற்படும்.

கடன் வாங்கி செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். தேவையற்ற செலவுகளைக் குறைத்துவிடுங்கள். கடன் வாங்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து கடன் வாங்குதல் அவசியம்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை அமைதியான சூழல் எதுவும் இல்லை. கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் வலுவாகும், இது பிரிவுக்கும் இட்டுச் செல்லும்.

மாணவர்களைப் பொறுத்தவரை உயர் கல்வி சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது பல வகைகளில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மேலும் முன் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையினைக் கேட்டு முடிவினை எடுக்கவும்.

4 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் எதைத் தொட்டாலும் தடங்கலை ஏற்படுத்துவார். ஆனால் தடைகளின் மூலம் சில அனுபவங்களைப் பெறுவீர்கள்.

தடைகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து செயல்படுங்கள். திருமண காரியம் என்று கொண்டால் 6 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் யோக குருவாக இல்லை.

மேலும் சுக்கிர பகவான் நீச்சமடையும் மாதமாக நவம்பர் மாதம் இருக்கும். கேதுவுடன் சஞ்சாரம் செய்யும் சுக்கிரன் குடும்ப வாழ்க்கைக்கும், திருமண காரியங்களுக்கும் ஏற்றதாக இல்லை.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

நண்பர்கள், உறவினர்கள் இடையேயான உறவில் விரிசல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் உடல் தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews