விருச்சிகம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!

விருச்சிக ராசி அன்பர்களே! டிசம்பர் மாதத்தினைப் பொறுத்தவரை செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் ஆட்சி பெற்று வலுவாக இட அமர்வு செய்துள்ளார்.

ராசி நாதன் செவ்வாய் பகவானுடன் சூர்ய பகவானும் இணைந்து இட அமர்வு செய்துள்ளார். ராசிநாதன் தசம கேனாதிபதியுடன் இணைந்துள்ளதால் வாழ்க்கையின் பல முக்கிய முடிவுகளை நீங்கள் இந்த காலகட்டத்தில் எடுப்பீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

தொழில் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தொழில் அபிவிருத்தி, புதுத் தொழில் துவங்குதல் என முன்னேற்றப் பாதியினை நோக்கியதாக இருக்கும்.

இதுவரை பல முக்கிய விஷயங்களை கிடப்பில் போட்டு முடிவுகளை எடுக்காமல் தவித்து வந்தநிலையில் தற்போது முன் அனுபவம் வாய்ந்தவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுப்பீர்கள்.

வேலைவாய்ப்பு என்று கொண்டால் உங்களின் திறமைக்கேற்ற வேலைக்கு முயற்சி செய்வீர்கள். மேலும் பலரும் தங்களின் துறை சார்ந்த வேலைக்கு மாறுதல் பெறுவீர்கள்.

சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற விஷயங்களில் இழுபறி நிலை நீடிக்கவே செய்யும். சுப விரயச் செலவுகள் வீட்டில் ஏற்படும், முடிந்தளவு கையை இறுக்கிப் பிடித்து ஆதாயம் தரும் முதலீடுகளைச் செய்து விடுங்கள்; இல்லையேல் பல வகைகளிலும் செலவாகி பணம் கரைந்தே போகும்.

பணத்தை விரயம் செய்தாவது மகிழ்ச்சியாக இருப்போம் என்ற எண்ணத்தினை குரு பகவானும் சுக்கிர பகவானும் ஏற்படுத்துவர். பலரும் கடன் வாங்கியாவது செலவுகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்குச் செல்வர். ஆனால் தேவையில்லாத கடன்கள் பின்னாளில் பெரும் மனத் தொந்தரவினை ஏற்படுத்திவிடும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

ராகு பகவான் மற்றும் கேது பகவான் இருவரும் 11 மற்றும் 5 ஆம் இடங்களில் இட அமர்வு செய்துள்ளனர். தாய்வழி உறவினர்கள் உங்களுக்குப் பல வகைகளிலும் உதவியாக இருப்பர். பிரிந்திருந்த உறவினர்கள் பல ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் ஒன்றிணைவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.