அத்தனை பேர் இருந்தப்போ விஜயகாந்த் சொன்ன வார்த்தை.. கண் கலங்கி போன விக்ரமன்..

மிக பெரிய ஆளுமையாக இருந்து வந்த விஜயகாந்த் உடல், அரசு மரியாதையுடன் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழகமே அவருக்காக திரண்டு போய் தங்களின் அஞ்சலிகளை தெரிவித்திருந்தனர். சென்னையே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு நடந்த இந்த இறுதி அஞ்சலியில் சினி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அதே வேளையில், இன்னொரு பக்கம் நடிகர் விஜயகாந்தின் திரைப்பட காட்சிகள் மற்றும் வசனங்களை பார்த்து ரசிகர்களும் மனமுருகி வருகின்றனர். பொதுவாக, ஒரு பக்கம் ஆக்ஷன் படங்கள் நிறைய நடிக்கும் விஜயகாந்த், இன்னொரு பக்கம் எமோஷனல் கலந்த குடும்ப திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் நிச்சயம் வானத்தை போல திரைப்படத்தை சொல்லலாம். இந்த படத்தை பிரபல இயக்குனர் விக்ரமன் இயக்கி இருந்தார்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வகையில் மிக அருமையாக அண்ணன் தம்பி பேச பிணைப்பு பற்றி இந்த படத்தில் எடுத்துரைத்திருப்பார் விக்ரமன். இரு வேடங்களில் நடித்திருந்த விஜயகாந்த், இரண்டிலுமே பின்னி பெடலெடுத்திருப்பார். பொதுவாக விக்ரமன் படங்கள் என்றாலே எவர்க்ரீன் வகையில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் அமைந்திருக்கும். அதில் மிக முக்கியமான படம் என்றால் வானதைப்போல. இதே போல, ஒரே ஹீரோவுடன் விக்ரமன் இரண்டு முறை பணிபுரிந்திருந்ததும் விஜயகாந்துடன் மட்டும் தான்.

வானத்தைப்போல படத்தை தொடர்ந்து, விஜயகாந்த் நடிப்பில் உருவான மரியாதை என்ற படத்தையும் விக்ரமன் தான் இயக்கி இருந்தார். இந்த நிலையில், விஜயகாந்தின் வெளிப்படையான மனம் குறித்து விக்ரமனை கண்கலங்க வைத்த சம்பவம் பற்றி தற்போது காணலாம்.

விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சமயத்தில் அவரை சந்திப்பதற்காக இயக்குனர் விக்ரமன் அவரின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கே தொண்டர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் இருந்துள்ளனர். விஜயகாந்தை வைத்து பிரஸ் மீட் ஒன்று நடந்து கொண்டிருந்துள்ளது. பலரும் பல விதமான கேள்விகளை முன் வைத்து கொண்டிருக்க, விக்ரமன் வருவதை கவனித்த விஜயகாந்த், ‘வாங்க சார்,’ என அழைத்ததுடன் இன்னொருவரை அழைத்து விக்ரமனை மேல் மாடியில் உள்ள அறையில் உட்கார வைக்கும்படியும், அவருக்கு சிகெரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதால் அறையின் ஜன்னலை திறந்து வைக்கும்படியும் கூறி உள்ளார்,

அந்த இடத்தில பல பேர் இருந்த போதிலும் தன்னை பார்த்த விஜயகாந்த் கொடுத்த கவுரவம், விக்ரமனை கண் கலங்க வைத்து விட்டது. அந்த அளவுக்கு தன்னை பெரிய ஆளாக கவுரவித்ததை எண்ணி நெகிழ்ந்து போனார் விக்ரமன். இப்படி அனைவரையும் மதிக்கும் குணத்துடன் வாழ்ந்த விஜயகாந்த் மறைவு, இன்னும் பல நாளுக்கு தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் தூக்கத்தை கலைக்கும் என்பது தான் உண்மை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.