தங்கலான் படத்தில் சந்தித்த கடும் சவால்கள்… படத்திற்காக இவ்ளோ கஷ்டப்பட்டாரா விக்ரம்?

பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவர உள்ள படம் தங்கலான். ஆஸ்கர் விருதைக் குறி வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தங்கலான் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் பேசுகையில் நம்மையே ஆச்சரியப்பட வைத்தார். படப்பிடிப்பின்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை என்ன அழகாக விவரிக்கிறார் என்று பாருங்கள்.

நம்ம இந்தியாவுல நிறைய நல்ல விஷயங்களும் நடந்துருக்கு. சில கெட்ட விஷயங்களும் இருக்கு. ஆங்கிலேயர்கள் டைம்னு தான் நமக்கு தெரியும். சில விஷயங்கள் அப்படி போகப் போக நம்ம அதை மறந்துடுறோம்.

இப்ப இருக்குற ஜெனரேஷனுக்கு அது தெரியுமான்னு கூட தெரியல. அதைப்பத்தி நம்ம வந்து சித்தரிக்கும்போது, அதைப்பத்தி நம்ம யோசிக்கும்போது டெபனைட்டா பாடம் மட்டும்தான் படமா இருக்கும். இந்தப் படத்துல வந்து அந்தக் கால கட்டத்துல இவங்க எப்படி இருந்தாங்க?

இந்த சமுதாயம் எப்படி இருந்துச்சு? அதுவந்து எந்த ஒரு சீன்லயும் இல்லாம இருக்காது. ஒவ்வொரு சீனும் இது வந்து யதார்த்தம். உண்மை. நடந்துக்கிட்டு இருக்குங்கறது நமக்குத் தெரியும்.

நம்ம வந்து அங்க போயி இருந்தோம்னா ஐயய்யோ ஏன் இப்படி கஷ்டமா இருக்குன்னு நினைப்போம். ஆனா அவங்க பிறந்தது இதுதான். வாழ்ந்ததும் இதுதான்.

Vikram
Vikram

அவங்களுக்கு இது மிகப்பெரிய கஷ்டமா இருக்காது. நாளைக்கு ஏதோ ஒண்ணு நடக்கும்கற நம்பிக்கை இருக்கும். அந்த இதுலயும் அவங்களுக்கு இன்பம், துன்பம், சந்தோஷம், காதல்னு இருக்கும். அதுதான் இந்தப் படம். நீங்க எல்லாமே பார்ப்பீங்க. இதுல என்ன ஒரு அழகுன்னா எங்கயும் போய் செட் போட்டு இருந்து எடுக்கல.

கேஜிஎப் ல அங்கே போய் இருந்தோம். அதே இடத்துல அவ்ளோ குளிரா இருக்கும் ராத்திரி. டே டைம்ல அவ்ளோ ஹார்ட்டா இருக்கும். திடீர்னு ரஞ்சித் சொல்வாரு. டேய் மூணு தேள் கொண்டு வாடா. உடனே 10 நிமிஷத்துல கொண்டு வருவாங்க. ஏன்னா எந்தக் கல்லை எடுத்தாலும் தேள் இருக்கும்.

ஒரு பாம்பு கொண்டு வான்னா உடனே அஞ்சு நிமிஷத்துல வந்துரும். எங்க பார்த்தாலும் கட்டு விரியன்னு அவ்ளோ பாம்புங்க. நாங்கள்லாம் செருப்பு இல்லாம பார்த்து பார்த்து நடந்து அந்த மாதிரி ஒரு இடம். முள்ளு, கல்லு எல்லாமே இருக்கும்.

அந்த இடத்துல அவங்களோட வாழ்க்கையை எடுத்திருக்கோம். இந்த மாதிரி அனுபவம் இனிமே கிடைக்குமான்னு தெரியல. எல்லாமே அவங்களோட வாழ்க்கை தான். நான் போட்ட உடையில இருந்து மேக் அப் 4 மணி நேரம், 5 மணி நேரம்லாம் ஆகியிருக்கு.

அந்த லொகேஷனுக்குப் போன அப்புறம் நாங்க அந்த கேரக்டர்ஸாவே மாறிடுவோம். இதான் முதல் தடவை லைவ் சவுண்டுல பண்றேன். இது டப்பிங் பண்றதை விட ரொம்ப கஷ்டம். அந்தக் காலத்தோட அவங்க பேசற விதம், தமிழ் சுத்தமா இருக்கணும், டோன் சுத்தமா இருக்கணும், கதாபாத்திரங்கள் வந்து சில டைம் குரல மாத்தணும்.

சில நேரங்கள்ல நடிக்கும் போது முகபாவங்களை மாத்துறப்ப அந்தக் குரல் செட்டாகாது. அதுவும் வேணும். இதுவும் வேணும் அப்படிங்கறப்போ, நடிச்சிட்டு டப்பிங்ல பண்ணிக்கலாம்னு விட்டுருவோம். அந்நியன் படம்லாம் இப்படித் தான் பண்ணினோம்.

கூனன் கதாபாத்திரம் ஐ ல வந்து டப்பிங்ல மாத்திருப்பேன். இதுல அப்படி செய்ய முடியாது. எல்லாமே கரெக்டா இருந்தா தான் பண்ண முடியும். எந்த இடத்திலயும் ரிலாக்ஸ் பண்ண முடியாது. காலைல ஆரம்பிச்சம்னா அந்த வேலை நடந்துக்கிட்டே இருக்கும். லஞ்ச் பிரேக் கூட சில சமயம் நின்னுக்கிட்டே சாப்பிட்டுருக்கோம். சில நேரங்கள்ல அதுவும் கட்.

Thangalan
Thangalan

அதிகாலையிலயே மூணு மணி நேரம் மேக் அப் போட்டுக்கிட்டு அங்க போயி நிப்பேன். அங்க போனதும் மங்கி கேப் போட்டு, குளிருக்கு போர்வையை எடுத்துப் போர்த்திக்கிட்டு இருப்பேன். எல்லாத்தையும் கழட்டச் சொல்வாங்க. கைநிறைய சகதியை எடுத்துக்கிட்டு அதை அப்படியே முகம், உடல்னு அப்புவாங்க.

அது ரொம்ப கோல்டா இருக்கும். அங்க பார்த்தீங்கன்னா அடிப்பட்டு குப்பை, மண் அழுக்கு, காயம் எல்லாமே இருக்கும். அவ்வளவும் நிஜம். ஒவ்வொரு நாளும் அப்பாட சாமி… எப்படா முடியும்னு இருக்கும். ஆனா அடுத்த நாள் மார்னிங் ரெடியா இருப்பேன். எனக்கு வந்து பயங்கரமான புத்துணர்ச்சி. இப்படி ஒரு இன்பமான அனுபவம் இருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...