மகான் 2 லுக்கில் சியான் விக்ரம்!.. கார்த்திக் சுப்புராஜின் அடுத்த தரமான சம்பவம் தயாராகுதா?

நடிகர் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்த மகான் படம் பெரும் வரவெற்ப்பை பெற்றது. இந்நிலையில் மகான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2022ம் ஆண்டு செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியது மகான்.

ஓடிடியில் வெளியான மகான்:

அந்த படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், மகான் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஒடிடியில் வெளியானது ரசிகர்களை அப்செட் ஆக்கியது. நடிகர் விஜய்யே மகான் படத்தை தியேட்டரில் ஏன் ரிலீஸ் பண்ணல என லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரை கேட்டதாக பேட்டி ஒன்றில் லலித் கூறியிருந்தார்.

சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படம் மூலம் ஹிரோவாக அறிமுகமானார். அதைதொடர்ந்து தந்தை விக்ரம் உடன் சரிக்கு சமமாக இந்த படத்தில் நடித்திருந்தார். மகான் படத்தில் உள்ள அப்பா மகன் காம்பினேஷன் அனைவரையும் ஈர்த்தது.

கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியை அடுத்து தளபதி விஜயின் 69வது படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது விஜய் இன்னும் ஒரு படத்துடன் தான் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்ததால் அந்த கடைசி படத்தை இயக்கப்போகும் இயக்குநர் வரிசையில் அட்லி, வெற்றிமாரன், ஹெச். வினோத் போன்ற பல இயக்குநர்களின் பெயர்களும் அடிப்படுவதால் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவது சந்தேகம் தான் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகான் 2 ரெடியாகுதா?:

இந்நிலையில், தளபதி 69 படத்தை மறந்து விட்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் நடித்திருந்த மகான் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படப்பிடிப்பை முடித்துவிட்டு ‘சீயான் 62’ ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். அதைதொடர்ந்து மகான் இரண்டாம் பாகத்தில் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டாம் பாகம் நிச்சயமாக தியேட்டரில் தான் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அக்ஷன் த்ரில்லராக இருந்த மகான் திரைப்படத்தில் ஒரு பள்ளி ஆசிரியரான சியான் விக்ரம் தனது குடும்பத்திடம் இருந்து பிரிந்து தனது வாழ்க்கை பயணத்தை பாபி சிம்ஹாவுடன் சேர்ந்து சரக்கு சாம்ராஜ்யத்தையே உருவாக்குகிறார். பின்னர் விக்ரமுக்கு எமனாக அவரது மகனே வருவதும் இருவருக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை ஒரு அக்ஷன் ப்ளாஸ்டாக உருவாக்கி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

சியான் விக்ரம் சமுக வலைத்தளதில் தனது புகைப்படத்துடன் மகான் 2 என கேள்விக்குறியுடன் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்களுக்கு மகான் 2 மீது உள்ள ஆர்வத்தை தூண்டியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.