விஜய்யை பின்னுக்கு தள்ளும் அஜித்தின் அடுத்தடுத்த 3 படங்களின் அப்டேட்கள்!

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இடையே போட்டிகள் இருக்கும். கதை, நடிப்பு ,நடனம், சண்டைக்காட்சிகள், பாடல் , மாஸான டைலாக்குகள், கதாநாயகி என ஒரு படத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் பல காரணங்கள் இருந்தாலும், முன்னணி ஹீரோக்கள் படங்களை ரசிகர்கள் கொண்டாடுவதில் எந்த குறையும் வந்தது இல்லை.

தற்போது தல அஜித் மற்றும் தளபதி விஜய் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். தளபதி விஜய் சினிமா பின்புறத்தில் இருந்து வந்தவர். இவரது தந்தை ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் தல அஜித் எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் வந்து இந்த அளவு திரை துறையில் முன்னேறி இன்று விஜயா அஜித்தா என்று கேட்கக்கூடிய அளவு திரைத்துறையில் சாதனை படைத்து வருகிறார்கள்.

தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக அளவு ஆதிக்கம் செலுத்தக்கூடிய நடிகராக நடிகர் விஜய் வளர்ந்து உள்ளார். அவருக்கு இணையாக வளர்ந்திருக்கும் அஜித் அந்தளவு வெற்றி படங்களை கொடுக்காமல் இருக்கக்கூடிய நிலையில் அண்மையில் இவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது .

இதனை அடுத்து விஜய் அரசியலில் ஈடுபடுவதற்காக பல வழிகளில் முயன்று வருவது அனைவருக்கும் நன்றாக தெரிந்த விஷயம் தான். அப்படி அரசியல் பக்கம் கவனத்தை செலுத்திவரும் விஜய்யின் இடத்தை கைபற்றி கொள்ள அதிரடி நடவடிக்கைகளில் தல அஜித் இறங்கியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் வரும் படங்களில் மிரட்டலாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதை கவரும் விதத்தில் இவரது திரைப்படங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.

தனுஷ் காட்டில் மழைதான்! உயர் நீதிமன்ற உத்தரவால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள்!

அஜித் மிகவும் திறமைசாலியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நடிகர் விக்ரமுக்கு அடுத்த படியாக உடல் எடை குறைப்பில் அதிரடி காட்டக் கூடியவர். ஒவ்வொரு படத்திற்கும் பிரத்தியேகமாக தன்னை மற்ற முயற்சிப்பார் என்பதால் அவரால் கட்டாயம் வேறுபட்ட கதாபாத்திரங்களையும் தர முடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள் அவரது ரசிகர்கள்.

அடுத்து வரும் ஏகே 63, ஏகே 64, ஏகே 65 படங்கள் வேற லெவலில் இருக்கும் என கூறப்படுகிறது. இயக்குநர் சங்கர், பிரசாந் நீல் போன்ற முன்னணி இயக்குனர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பல்வேறு வகைகளில் அடுத்த படத்திற்க்கு திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும், அவை எல்லாம் நிஜமாகும் சமயத்தில் கட்டாயம் விஜயை விட அதிக அளவு படங்களில் நடித்து தனது பெயரை நிலை நிறுத்த முயற்சி செய்வார் தல அஜித். இது எந்த அளவு சாத்தியமாகும் என்பது இனிவரும் காலங்களில் தான் தெரியும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...