அவரு கூட நடிச்சா இமேஜ் கெட்டுரும்.. தன்னுடன் நடிக்க மறுத்த நாயகிகள்.. மறுகணமே விஜயகாந்த் எடுத்த அதிரடி முடிவு..

சினிமாவிலும், அரசியலிலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணிய கேப்டன் விஜயகாந்த், இந்த உலகை விட்டு பிரிந்து விட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பல்வேறு தடைகளை தாண்டி சினிமாவில் சாதித்த விஜயகாந்த், அதன் பின்னர் அரசியலிலும் நுழைந்து இரண்டு தேர்தலிகளிலேயே எதிர்க்கட்சி தலைவராகவும் மாறி இருந்தார். சினிமாவில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் கூட ஹீரோவாக வாழ்ந்து மறைந்தார் விஜயகாந்த்.

அவரால் தமிழக மண்ணில் உதவி பெற்று வாழ்க்கையே மாறிய நபர்கள் ஏராளம். சினித்துறை தொடங்கி முன் பின் தெரியாத நபர்களுக்கு கூட பெரிய அளவில் உதவிகளை செய்யக் கூடியவர் விஜயகாந்த். அதே போல, அவரது வீட்டிலோ, அலுவகத்திலோ வரும் நபர்களுக்கு சாப்பாடு போட்டு பசியாறிய பின்னர் தான் வெளியே அனுப்புவாராம்.

எந்த நபரும் தன்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்ற அளவுக்கு எளிமையாக இருந்த விஜயகாந்த், நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது தமிழ் சினிமாவுக்காக பல்வேறு உதவிகளை செய்து மேம்படவும் வழி செய்தார். அப்படிப்பட்ட கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் முன்னணி ஹீரோவாக மாறியது மிக எளிதாக நடக்கவில்லை. பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த போது ஏராளமான அவமானங்கள். அதனால் தான் பெரிய ஆளான பின்னர் அனைவரையும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சமமாக நடத்தி ஒரே சாப்பாடு போட்டார் விஜயகாந்த்.

அப்படி இருந்த விஜயகாந்தின் ஆரம்ப காலகட்டத்தில் சில நடிகைகள் அவருடன் இணைந்து நடிக்க மறுப்பு தெரிவித்த காரணமும் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு விஜயகாந்த் மெல்ல வளரத் தொடங்கிய சமயத்தில் அவருக்கு எதிராக பல சூழ்ச்சிகள் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இதன் காரணமாக, ஸ்ரீப்ரியா, சரிதா உள்ளிட்ட நடிகைகள் விஜயகாந்துடன் இணைந்து நடிக்கவும் மறுப்பு தெரிவித்தனர்.

அந்த நடிகைகளிடம் விஜயகாந்த் அவர்களுடன் நடிக்க விரும்பாததாக யாரோ புரளியை கிளப்பி விட, விஜயகாந்துடன் ஜோடி சேரவே பலர் தயங்கி உள்ளனர். இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பிய விஜயகாந்த், நேராக சரிதாவிடம் சென்று ‘உங்களுடன் இணைந்து நடிக்க எனக்கு விரும்பவில்லை என நான் யாரிடமும் சொல்லவில்லை. யாரோ சொன்னதை நம்ப வேண்டாம்’ என்றும் கூறி உள்ளார்.

இதே போல, ராதிகாவும் தன்னுடன் முதலில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் பின்னர் தொடர்ந்து தன்னுடன் பல படங்கள் நடிக்கும் சூழலும் ராதிகாவுக்கு உருவாகி இருந்ததாகவும் விஜயகாந்த் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். விஜயகாந்துடன் நடித்தால் இமேஜ் போய்விடும் என்றும் பல நடிகைகளிடம் யாரோ வேண்டுமென்ற ஏற்றி விட்டு வேடிக்கை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் விஜயகாந்தை சினிமாவில் இருந்தே காலி செய்ய பலரும் பல விதமான திட்டங்களை போட்டு அதை செயல்படுத்தவும் முயற்சி செய்துள்ளனர். இப்படி பல தடைகளை கடந்து சினிமாவில் ஜெயித்த விஜயகாந்த், அரசியலில் மாஸ் என்ட்ரி கொடுத்தும் சூழ்ச்சிகளில் சிக்கி தனது எதிர்காலத்தை பறிகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.