ஒரே நேரத்துல இரண்டு படம் நடிக்கணும்.. கொஞ்சம் கூட யோசிக்காம விஜயகாந்த் எடுத்த ரிஸ்க்.. அந்த அளவுக்கு சினிமா மேல அவருக்கு காதல்..

ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்கள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி இருந்த காலத்தில், தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக விஜயகாந்த் இருந்ததற்கு மிக முக்கிய காரணம், சினிமா மீது அர்ப்பணிப்புடன் அவர் இருந்தது தான்.

மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவில் நாயகன் என்ற அந்தஸ்துக்கு வந்த விஜயகாந்த், தன்னுடன் பணியாற்றும் அனைவரையும் சமமாக நடத்தி இருந்தார். கேப்டன் என அன்பாக அழைக்கப்படும் விஜயகாந்த், நிஜத்திலும் ஒரு நல்ல மனிதனாகவே வாழ்ந்து வருகிறார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் முன்பு போல அவரது கம்பீரமான பேச்சும், நடையையும் தொண்டர்களாலும், ரசிகர்களாலும் பார்க்க முடியாமலே போய்விட்டது.

சமீபத்தில் மருத்துவமனையில் இருந்த விஜயகாந்த் ,சில தினங்களுக்கு முன்பாக வீடு திரும்பி இருந்த நிலையில் அவர் முன்பு போல குணமடைந்து வீரநடை போட வேண்டும் என்றும் உருக்கத்துடன் அனைவரும் வேண்டி வருகின்றனர். இந்த நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்தது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

ஒரு சமயத்தில் இரவு, பகல் பாராமல் மிகவும் பிசியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார் விஜயகாந்த். அந்த சமயத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்திற்காக ஒரு படம் நடிக்க விஜயகாந்த் சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் நடிப்பதற்கு மிகவும் ஒரு சிரமமான நிலை உருவாகி இருந்தது.

சிவப்பு மல்லி என்ற படத்தை ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க விஜயகாந்த் நடித்திருந்தார். முன்னதாக, அந்த படத்தின் பூஜை 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி போடப்பட்டிருந்தது மேலும் அந்த படத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்யவும் அவர்கள் திட்டமிட்டு இருந்தார்கள். சூட்டிங் ஆரம்பம் மற்றும் ரிலீஸுக்கு நடுவே வெறும் 56 நாட்கள் தான் இருந்தது. 35 நாட்கள் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டிருந்ததால் மீதி 20 நாட்களுக்கும் குறைவான நேரத்தில் தான் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடக்க வேண்டும் என்ற கட்டாயமும் இருந்தது.

அதே சமயத்தில், ‘சாட்சி’ என்ற திரைப்படத்திலும் விஜயகாந்த் நடித்து வந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு சேலத்தில் நடைபெற்றது. மறுபக்கம் சிவப்பு மல்லி படத்தின் படப்பிடிப்பு மதுராந்தகத்தில் நடைபெற்றது. இரண்டு இடங்களுக்கும் தூரம் அதிகம் இருந்தாலும் சாட்சி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சோர்விலலாத இல்லாத ஒரு நடிகராக சிவப்பு மல்லி படத்தின் படப்பிடிப்பு செட்டுக்கு மாலை வேளையில் வந்து விடுவாராம் விஜயகாந்த்.

இதேபோல இரவு முழுவதும் நடித்துவிட்டு அதிகாலைக்கு சாட்சி படத்தின் படப்பிடிப்பிற்காக சேலத்திற்கும் கிளம்பி விடுவார் விஜயகாந்த். இப்படி ஒரே வேளையில் இரண்டு படங்களை நடித்துக் கொடுத்த விஜயகாந்தின் அர்ப்பணிப்பை கண்டு ஒட்டுமொத்த படக்குழுவும் மிரண்டு போனது என்று தான் கூற வேண்டும். அதுமட்டுமில்லாமல் சிவப்பு மல்லி திரைப்படம் திட்டமிட்டபடியே ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வெற்றி பெற்றிருத்ததும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews