என்ன ஒரு தங்கமான மனசு… தனக்கு நடந்தது யாருக்கு நடக்கக்கூடாது… விஜயகாந்த் எடுத்த முடிவு!

தமிழ் திரை உலகில் 1978-ம் ஆண்டு இனிக்கும் இளமை திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி இன்று ரசிகர்களின் நாயகனாக நிலைத்திருப்பவர் கேப்டன் விஜயகாந்த். திரை வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு நிராகரிப்புகளையும் இன்னல்களையும் சந்தித்தவர் விஜயகாந்த். கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும் அதற்கேற்ற மரியாதை விஜயகாந்த்துக்கு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் விஜயகாந்தின் படங்கள் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களுடன் இணைந்து விஜயகாந்த் நடிப்பில் வெளியான படங்கள் வெற்றி பெற தொடங்கின. இவர்கள் இருவரது கூட்டணியில் சுமார் 17 படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வெற்றி படங்கள் என்றே கூறலாம். விஜயகாந்த் திரையில் நடிப்பதை காட்டிலும் நிஜ வாழ்க்கையில் பல மடங்கு நல்லவர் என்றே பலரும் கூறுவர்.

லாங் பிரேக் கொடுத்த நடிகர்.. இன்று முன்னணி குணசித்திர நாயகன் எம்.எஸ்.பாஸ்கர் கடந்து வந்த பாதை!

ஆரம்பத்தில் உதாசீனப்படுத்தும் நடிகராக இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டு மிகப்பெரிய நடிகராக மாறினார். ஆனால் அப்போது அவர் எடுத்த முடிவு படப்பிடிப்பு தளத்தில் பலரையும் மகிழ்ச்சி அடையச் செய்தது. அதாவது அவர் ஒரு படத்தில் நடித்தால் அந்த படப்பிடிப்பு தளத்தில் அவர் சாப்பிடும் சாப்பாட்டை தான் அங்கு பணிபுரியும் அனைவரும் சாப்பிட வேண்டும் என்பதுதான்.

ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கையின் போது பெரிய நடிகர், நடிகைகளுக்கு ஒரு சாப்பாடும் விஜயகாந்த் அவர்களுக்கு வேறு சாப்பாடும் வழங்கப்பட்டுள்ளது. அன்று தான் விஜயகாந்த் இத்தகைய முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அதே போன்று சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் பலருக்கு பசியாற்றும் இடம் என்றால் அது விஜயகாந்தின் அலுவலகம் தான்.

தினத்தந்தியில் வந்த விளம்பரத்தால் புகழின் உச்சத்திற்குப் போன நடிகர் இவரா?

அவர் செய்யும் நல்ல விஷயங்கள் அதிகம் வெளியில் தெரியவில்லை என்றாலும் ரசிகர்கள் அவரை கொண்டாடினர். ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடக்கிறது என்றால் அங்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூடும். அந்த இடமே ஷூட்டிங் எடுக்க முடியாத அளவுக்கு ஆரவாரமாக இருக்கும். ஆனால் அந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் அவர்கள் சென்று நான் உங்ககிட்ட வருவேன் ஷூட்டிங் முடியட்டும் அமைதியாக இருங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிடுவாராம்.

இப்படித்தான் நடிகர் திலகத்துக்கு ‘சிவாஜி‘ன்னு பெயர் வந்துச்சா? சுவராஸ்யமான வரலாற்றுத்தகவல்

அதன் பிறகு ரசிகர்களும் அமைதியாக காத்திருப்பார்களாம். அந்த அளவிற்கு விஜயகாந்த் அவர்களின் சொல்லுக்கு ரசிகர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஆனால் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தற்போதைய நிலை ரசிகர்களை வேதனை அடையச் செய்துள்ளது. அவர் விரைவில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...