இப்படித்தான் நடிகர் திலகத்துக்கு ‘சிவாஜி‘ன்னு பெயர் வந்துச்சா? சுவராஸ்யமான வரலாற்றுத்தகவல்

தமிழ் சினிமாவில் 1950களில் தியாராஜபாகவதர், பி.யு.சின்னப்பா என ஆரம்ப கால சூப்பர் ஸ்டார்கள் திகழ 60களின் பிற்பகுதியை ஆண்டவர்கள் ஜாம்பவான்கள் இருவர். ஒருவர் எம்.ஜி.ராமச்சந்திரன், மற்றொருவர் சின்னய்யா கணேசன் என்ற சிவாஜி கணேசன். ஒருவர் சூப்பர் ஸ்டாராக திகழ சிவாஜியோ நடிகர் திலகமாகத் திகழ்ந்தார். இவருக்கு எப்படி சிவாஜி என்ற பெயர் வந்தது என்பது ஒரு சுவாரஸ்ய வரலாறு இருக்கிறது.

காஞ்சியில் அண்ணாவின் வீட்டில் தங்கி திராவிட நாடு இதழ்ப் பணியில் உதவியாக இருந்தபடியே நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார் கணேசன். அண்ணா சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றத் திட்டமிட்டிருந்தார். சிவாஜியாக நடிக்க கட்டுடலும் கணீர் குரலில் வசனமும் பேசி நடிக்க ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார்.

ஆனால் அறிஞர் அண்ணாவின் வசனத்தைப் பேசி நடிக்க கணேசனுக்கு உள்ளுர ஆசையிருந்தாலும் வசனத்தைத் தவிர அண்ணா எதிர்பார்த்த விஷயங்கள் அவரிடம் இல்லை. அண்ணாவின் நண்பர் நடிகமணி டி.வி. நாராயணசாமி அந்த வேடத்தில் நடிக்க எம்.ஜி.ஆரை பரிந்துரைத்தார்.

Sivaji

குணா படத்தில் நடிக்க வைக்க கமல் வலைவிரித்த ஹீரோயின்கள் லிஸ்ட்…! அடேங்கப்பா…. இவ்ளோ இருக்கா?

ஒரு மதிய வேளையில் எம்.ஜி.ஆரை கையோடு காஞ்சிக்கு அழைத்துவந்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். திரையுலகில் புதிய வீச்சுக்கு அந்த நாள் அடித்தளம் இட்டது எனலாம். சிவாஜியாக நடிக்க எம்.ஜி.ஆர் ஒப்புக்கொண்டார். சிவாஜியாக நடிக்க ஒப்புக் கொண்ட எம்.ஜி.ஆர் ஏனோ சில காரணங்களால் நாடகத்தில் நடிக்க மறுத்து ஒதுங்கிக் கொண்டார். அதேசமயம் நாடக ஆசிரியர் அண்ணாத்துரையின் எழுத்து மீது பெரும் காதல் பூத்தது அவருக்கு.

Sivaji

எம்.ஜி.ஆர் ஒதுங்கிய நிலையில் வாய்ப்பு இப்போது கணேசனுக்கு கிட்டியது. நாடகத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி கேரக்டரில் கணேசன் நடிக்க நாடகம் சூப்பர் ஹிட் ஆகி மக்களிடையே ஆதரவைக் கொடுத்தது.

விஜயகாந்த் இல்லனா என் வாழ்க்கையே இல்லை!.. ஓபன் டாக் கொடுத்த சரத்குமார்!..

சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்ஜியம் நாடகத்திற்கு ஒருமுறை தலைமைத் தாங்க வந்தார் பெரியார். கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து, “இந்த நாடகத்தில் எந்த இடத்திலும் கணேசனை காண முடியவில்லை. சிவாஜியை மட்டுமே பார்த்தேன்” என உச்சிமுகர்ந்தார். அன்று முதல் சின்னய்யா கணேசன், ‘சிவாஜி’ கணேசன் ஆனார். இதன் பின்பு சிவாஜியின் நடிப்பில் கலைஞரின் வசனத்தில் உருவான பராசக்தியின் வெற்றி நாடறிந்த ஒன்று.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.