காமராஜர் பிறந்தநாளில் பக்கா பிளானுடன் களமிறங்கும் விஜய்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனைகள் ஈடுபடும் நடிகர் விஜய் காமராஜர் பிறந்தநாளில் ஏழை மாணவர்களுக்காக தமிழுக்கு முழுவதும் இரவு நேர பாடசாலையை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக விஜய் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

இதற்கு ஏதுவாக சென்னையில் அடுத்த பனையூரில் அவரது அலுவலகத்தில் மக்கள் இயக்குனர் நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதன்படி நேற்று பனையூர் இல்லத்தில் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தை தொடங்கினார்.

இந்த கூட்டத்தில் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை கொண்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பெரியார், காமராஜர், அண்ணாவைப் பற்றி பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டுமென மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலையை காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி தொடங்குவதற்கு நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘லால் சலாம்’ படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த்! மேஜிக் அப்பா என புகழ்ந்த மகள் ஐஸ்வர்யா!

கண் தானம் செய்வதற்காக விழியகம், ரத்ததானம் செய்வதற்காக குருதியகம், பசி பட்டினியால் தவிக்கும் மக்களுக்கு விருந்தகத்தை தொடங்கிய விஜய் தற்போது பள்ளி மாணவர்களுக்காக இரவு நேர பாடசாலையை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல முழு நேரமாக அரசியலுக்கு வந்து விட்டால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என நடிகர் விஜய் பொறுப்பாளர்கள் முன்னிலையில் பேசியதாக தகவல் கசிந்திருக்கிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...