இதான் பொங்கல் விருந்து.. வெளியான The Goat படத்தின் புது போஸ்டர்.. விஜய் கூட இவங்களும் இருக்காங்களா..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தளபதி விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் இவருக்கு தமிழ் நாட்டை தாண்டி இந்திய அளவிலும் உள்ள நிலையில், அவரது படம் பற்றிய அறிவிப்பு வரும் போதே ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் மூழ்கி விடுவார்கள். அந்த அளவுக்கு மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கி வைத்துள்ள விஜய், இன்னொரு பக்கம் நிறைய நலத்திட்ட உதவிகளையும் தனது மன்றத்தின் மூலம் செய்து வருகிறார்.

பள்ளி மாணவர்களுக்கு உதவி தொகை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி என தானே முன்னின்றும் பல நல்ல விஷயங்களை நடிகர் விஜய் செய்திருந்தார். இவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த நிலையில் அவருடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், பிரியா ஆனந்த் என பலரும் உடன் நடித்திருந்தனர்.

லியோ திரைப்படம் அதிக வசூலை அள்ளிய நிலையில், அவரின் அடுத்த படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய்யின் நடிப்பில் அடுத்ததாக ‘The Greatest Of All Time’ (Goat) என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்க, AGS நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் முதல் முறையாக மீனாட்சி சவுத்ரி இணைந்து நடிக்கிறார்.

இவர்களுடன் பிரபுதேவா, மைக் மோகன், பிரசாந்த், ஜெயராம், அஜ்மல், யோகி பாபு, ஸ்னேகா, லைலா என ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். இதில் மைக் மோகன் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றது. மேலும் Goat படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஆங்கில புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிப்பதாக போஸ்டரின் அடிப்படையில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதே போல, இந்த திரைப்படம் டைம் ட்ராவல் கதையம்சம் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இந்த நிலையில், பொங்கல் ஸ்பெஷலாக புதிய போஸ்டர் ஒன்றை Goat படக்குழு வெளியிட்டுள்ளது.
Vijay Goat

இதுவரை வந்த போஸ்டரில் விஜய் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியான போஸ்டரில் நடிகர் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும், இவர்கள் அனைவரும் போலீஸ் அல்லது ஆர்மி வீரர்கள் போல உடையணிந்து இருக்க, இவர்களின் பின்னால் ஹெலிகாப்டர் மற்றும் பாம் வெடிப்பது போன்றும் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தின் கதை எந்த மாதிரி இருக்கும் என்பதை அறியும் ஆர்வமும் ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.