கேரள விமான நிலையமே ஸ்தம்பிச்சுப் போச்சு!.. கோட் படத்தோட சூட்டிங்கை நடத்த விடுவார்களா ரசிகர்கள்?..

தனி விமானம் மூலம் கேரளாவுக்கு நடிகர் விஜய் சற்றுமுன் வருகை தந்த நிலையில், விமான நிலையம் முழுவதும் விஜய் ரசிகர்கள் குவிந்துவிட்டனர். விமான நிலையத்திலிருந்து விஜய் தனது காருக்கு வருவதே பெரிய சிக்கலாக இருந்தது. காருக்குள் எரிய நடிகர் விஜய், சன் ரூஃப் வழியாக மேலே தலையை காட்டி ரசிகர்களுக்கு கை அசைத்தார்.

தமிழ்நாட்டில் தளபதி விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளனரோ அதே அளவுக்கு கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் உள்ளார்கள். மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரமே விஜயின் தீவிர ரசிகர் தான் என சமீபத்திய பேட்டியில் கூறினார்.

கேரளாவில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு:

மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் எந்த அளவுக்கு கேரளாவில் வசூல் இட்டு இருக்கிறதோ அதே அளவுக்கு வசூலை விஜய் படங்களும் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் காருக்குள் ஏறி கிளம்பி விடலாம் என நினைத்த நிலையில் அவரது கார் செல்லும் வழியெல்லாம் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக நின்று கார்கள் மூலமாகவும், பைக்குகள் மூலமாகவும் சுற்றி வளைத்து, விஜய்க்கு ஆரவாரமான வரவேற்பை கேரளாவில் கொடுத்துள்ளனர். #VIJAYStormHitsKerala எனும் ஹாஷ்டேக் தற்போது டிரெண்டாகி வருகிறது. அதில் ஏகப்பட்ட விஜயின் வீடியோக்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

மீசை இல்லாமல் யங் கெட்டப்பில் நடிகர் விஜய் இருப்பதை பார்த்து படம் முழுவதுமே இளம் விஜய்க்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் என ரசிகர்கள் யூகிக்க தொடங்கியுள்ளனர்.

கேரளாவில் விஜய் நுழைவதற்கே இவ்வளவு சிக்கலாக உள்ளதே, திட்டமிட்டபடி படப்பிடிப்பு அங்கே எப்படி நடக்கும் என்றும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு தினமும் ஏராளமான ரசிகர்கள் குவிவார்கள் என்பதால் அங்கேயும் ரசிகர்களை கேரவன் மீது ஏறி நடிகர் விஜய் சந்திப்பார் என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி, வைபவ், ஜெயராம் மற்றும் திரிஷா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...