மிஷ்கின் இயக்கத்தில் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி!..

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற குறைந்தபட்ச படங்களில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடையே நீங்காத இடம் பிடித்து பிரபல நடிகராக மாறினார். அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சேதுபதி, நானும் ரவுடிதான், 96, காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து தனிக்கன ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி மக்கள் செல்வனாக வலம் வருகிறார்.

மாஸ் ஹீரோவாக நடித்து வந்த விஜய் சேதுபதி அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் வில்லனாக நடிக்க தொடங்கினார். சுந்தரபாண்டி திரைப்படத்தில் வில்லனாக களமிறங்கிய விஜய் சேதுபதி அதை தொடர்ந்து ரஜினியின் பேட்ட திரைப்படத்தில், தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும், உலகநாயகன் கமலஹாசன் திரைப்படத்திலும் மிகச்சிறந்த வில்லனாக நடித்து கலக்கி இருப்பார். அதை தொடர்ந்து சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து ஹிந்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் ஹிந்தியை தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களிலும் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.

மேலும் வில்லன் கதாபாத்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் ஹீரோ அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி தனது ஐம்பதாவது படத்தில் ஹீரோவாக களமிறங்க உள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்திற்கு மகாராஜா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மலையாள இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் பாலிவுட் பிரபல ஹீரோயின் கங்கனா ரனாவத்வுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாக இருந்தது. சைக்கா லாஜிக்கல் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இயக்குனர் ஸ்ரீராம் இயக்கத்தில் இளைஞர்களின் கனவு கண்ணியான கேத்ரினா ஃகைப் உடன் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மேரி கிறிஸ்மஸ் திரைப்படம் கிறிஸ்துமஸ் முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படங்களை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகியிருந்தது.

20 வருடத்தில் 80 படங்களைத் தொட்ட லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா?

உதயநிதியின் சைக்கோ திரைப்படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் திரையில் வெளியாக தயாராக உள்ளது. சமீபத்தில் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் இயக்குனர் மிஷ்கின் நடிகர் விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்தும் இயக்கும் படத்திற்கு அவரே இசையமைக்க உள்ளார். தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ட்ரெயின் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் தலைப்பிற்கு ஏற்றபடி இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ட்ரெயினில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து ஆக்சன் திரில்லர் கதையாக உருவாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்க உள்ளதாகவும், படத்திற்காக செட் போடும் பணிகள் பூந்தமல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.