தமிழ் ரசிகர்களை இப்படி ஏமாத்திப்புட்டாரே விஜய்சேதுபதி!.. மெரி கிறிஸ்துமஸ் டிரெய்லரில் இதை கவனிச்சீங்களா!

பாலிவுட்டில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை படைத்த பட்லாபூர், அந்தாதூன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, காயத்ரி, ராதிகா சரத்குமார் மற்றும் சஞ்சய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்தின் புதிய டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் டிரைலர் ஒரு மாதிரியும் ஹிந்தி ட்ரெய்லர் இன்னொரு வடிவத்திலும் உருவாக்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. ஹிந்தி ட்ரெய்லரில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப்பை ஹைலைட் செய்துள்ளனர். மாறாக தமிழ் டிரைலரில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃபை தாண்டி நடிகை காயத்ரி, ராதிகா ஆப்தே மற்றும் ராதிகா சரத்குமார் போன்ற நடிகர்களையும் காட்டியுள்ளனர்.

விஜய்சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ்:

நடிகர் விஜய் சேதுபதிக்கு உதட்டு முத்தம் கொடுக்கும் கத்ரீனா கைப் சீனையும் தமிழில் அலேக்காக தூக்கி விட்டனர். மெரி கிறிஸ்துமஸ் என டைட்டில் வைத்துள்ள நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் அடையாளமே தெரியாத கதாபாத்திரங்களில் புதுப்பேட்டை, நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தனது விடாமுயற்சியின் காரணமாக ஹீரோவாக முன்னேறினார். அதன் பின்னர் வில்லனாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து தனது அபார நடிப்புத் திறமையை வெளிக்காட்டினார்.

தமிழுக்கு ஒன்று ஹிந்திக்கு ஒன்று:

விஜய் சேதுபதியின் நடிப்பு திறமையை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கானின் ஜவான், ஷாகித் கபூரின் ஃபர்ஸி என அடுத்தடுத்து வாய்ப்புகள் இந்த ஆண்டு குவிந்துள்ளது. இந்நிலையில், அடுத்ததாக கத்ரினா கைஃப் உடன் ஜோடியாக நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படம் அடுத்த ஆண்டு ஜனவரிக்கு தனுஷ், சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் படங்களுடன் போட்டியாக வெளியாக உள்ளது.

நடிகர் தனுஷை போல விஜய் சேதுபதியும் கூடிய சீக்கிரமே ஹாலிவுட்டுக்கும் பறந்து விடுவார் என்றே தெரிகிறது. அந்த அளவுக்கு வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி வருகிறார். அந்தாதூன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பழங்காலத்து பாலிவுட் படம் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.

ஷாருக்கானுக்கு வில்லனாக அட்லி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய நம்பர் ஒன் படமாக உள்ள நிலையில், கத்ரீனா கைஃப் உடன் அவர் இணைந்து நடித்து அடுத்த ஆண்டு வெளியாக உள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வசூல் வேட்டை நடத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.