வெங்கட் பிரபுவின் அழைப்பிற்கு நோ சொன்ன விஜய்! அப்போ தளபதி 68 படத்தின் நிலைமை என்ன?

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் இன்னும் முடியாத நிலையில் விஜய் தனது அடுத்த திரைப்படம் ஆன தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து வருகிறார். லியோ திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் படத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து விஜய் ரசிகர்கள் இந்த படத்தின் மீது மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

அதற்கு முக்கிய காரணம் வெங்கட்பிரபு அவர்கள் தான். சென்னை 28 திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபு பொதுவாக ஜாலியான குணம் படைத்தவர். இவர் இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா, பிரியாணி, மன்மத லீலை போன்ற திரைப்படங்கள் இந்த காலத்தில் இளைஞர்களை மையமாக வைத்து முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட காமெடி திரைப்படங்களாக அமைந்துள்ளது. இப்படிப்பட்ட வெங்கட் பிரபு தல அஜித்தை வைத்து மங்காத்தா எனும் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படத்தையும் கொடுத்துள்ளார். மேலும் நடிகர் சிம்புவை வைத்து மாநாடு எனும் கமர்சியல் வெற்றி திரைப்படத்தையும் சமீபத்தில் இயக்கியுள்ளார்.

மேலும் வெங்கட் பிரபு படப்பிடிப்பு முடிந்தவுடன் மாலை நேரங்களில் பொதுவாக பார்ட்டிகளில் கலந்து கொள்வது நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு ஜாலியாக இருப்பது என கேளிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு இயக்குனர். ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபு விஜயை சந்தித்து தளபதி 68 திரைப்படத்திற்கான ஒன் லைன் ஸ்டோரி கூறி அதற்கு விஜய் சம்மதித்ததும் தனது முழு பழக்கவழக்கத்தையும் மாற்றி பொறுப்பாக மாறியதாக பல தகவல்கள் வெளியானது.

அந்த வகையில் தன்னை மதித்து விஜய் கொடுத்த வாய்ப்பை முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இயக்குனர் வெங்கட் பிரபு முழு முயற்சியில் ஈடுபட்டு படத்தின் மொத்த கதையை உருவாக்கி தளபதி விஜய் இடம் கூறி அந்த படத்தின் பூஜைகள் மிகப் பிரமாண்டமாக நடந்தது. சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் நடந்த தளபதி 68 பூஜை அதை தொடர்ந்து முதல் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்த பாடலை தொடர்ந்து தளபதி 68 இன் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தாய்லாந்தில் நடந்த நிலையில் அங்கு தளபதி விஜய் மற்றும் நடிகர் மைக் மோகன் கலந்துள்ளார். தாய்லாந்தில் ஒரு பிரம்மாண்ட சண்டை காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் தளபதி 68 படகுழு சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளது. பல நாள் பார்டிகளுக்கு விடுமுறை கொடுத்திருந்த வெங்கட் பிரபு தன் பிறந்தநாளை முன்னிட்டு பிரம்மாண்ட பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அந்த பாட்டிக்கு தளபதி விஜய் அவர்களை அன்புடன் வரவேற்றுள்ளார். ஆனால் தளபதி விஜய் அதில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு காரணம் இயக்குனர் வெங்கட் பிரபு மீது எந்த கோபமும், வெறுப்பு அல்ல.

அதற்கு பதிலாக தளபதி என பிரபலத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் இதுபோன்ற பார்ட்டிகளில் கலந்து கொள்வதை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்வது நல்லது என்ற உள்நோக்கத்தில் மட்டும் தான்.
மேலும் விஜய் தனது ரசிகர்களுக்காக அரசியலில் ஆர்வம் காட்டி வரும் இந்த நேரத்தில் இதுபோன்ற கேளிக்கை விஷயங்களில் இருந்து தன்னை முற்றிலுமாக விளக்கி வைத்துள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்களும் அந்த பார்ட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1000 தியேட்டர்களில் அதிரடியாக ரீ- ரிலீஸ் ஆகும் கமலின் ஆளவந்தான்! ரன்னிங் டைமில் கை வைத்த கலைப்புலி தாணு!

மேலும் இந்த முக்கிய இரு பிரபலங்களின் ஈடுபாடு இல்லாததால் அந்த நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக தளபதி 68 படத்தின் படப்பிடிப்புகள் தாய்லாந்தின் பட்டாயா என்னும் இடத்தில் நடைபெற்ற போது கூட இயக்குனர் வெங்கட் பிரபு எந்த பார்ட்டிகளும் கொண்டாடாமல் முழு கவனத்துடன் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் தன் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என நினைத்து சென்னையில் இருந்து தன் நண்பர்களை வரவழைத்து ஒரு சொகுசு கப்பலில் பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முதலில் தளபதி 68 படத்தில் உள்ள சண்டைக் காட்சிகளை முடிக்க செடியுல் போடப்பட்டுள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...