1000 தியேட்டர்களில் அதிரடியாக ரீ- ரிலீஸ் ஆகும் கமலின் ஆளவந்தான்! ரன்னிங் டைமில் கை வைத்த கலைப்புலி தாணு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமல் பிஸியாக நடித்து வருகிறார். சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் மூலம் வலைதளங்களில் டிரெண்டாக மாறியுள்ள கமலின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் மாஸ் அப்டேட் வெளியானது.

சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 திரைப்படத்தின் ட்ரெய்லர், அதைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கம் கமலின் 234 வது திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் கமல் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக 22 ஆண்டுகளுக்கு முன் கமல் நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடித்த ஆளவந்தான் திரைப்படம் 22 வருடங்களுக்கு முன்னதாகவே 610 ரேட்டர்களில் மிகப் பிரம்மாண்டமாக வெளியீடு செய்யப்பட்டது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து மனிஷா கொய்ராலா, ரவீனா டாண்டன், அனு ஹாசன்,சரத் பாபு, பாத்திமா பாபு, ரியாஸ்கான் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. 400 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் அன்றைய ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட விட்டாலும் தற்போதைய கமல் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் அமைந்திருந்தது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தானும் மீண்டும் வெள்ளித்திரையில் ஆளவந்தான் திரைப்படம் எழிலோடும் பொலிவோடும் விரைவில் வெளியாகும் என தனது எக்ஸ் தல பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆயிரம் திரையரங்குகளில் ஆளவந்தான் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக ரீரிலிஸ் செய்ய உள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். ஆளவந்தான் வெல்லுவான் புகழ் அள்ளுவான் என்னும் கேப்ஷனுடன் இந்த தகவலை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

விஜய் ஹீரோ அவதாரம் எடுக்க நடிகர் பிரசாந்த் ஒரு முக்கிய காரணமா?

கமல் நடிப்பில் முதலில் வெளியான ஆளவந்தான் திரைப்படம் இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டது, ஆனால் தற்பொழுது ரீ ரிலீஸ் ஆகும் ஆளவந்தான் திரைப்படத்தில் பல மாற்றங்களை தயாரிப்பாளர் புகுத்தியுள்ளார். படத்தின் விறுவிறுப்பு தன்மை குறையாத விதத்தில் சில கிளாசிக் காட்சிகளை மாற்றி இந்த திரைப்படம் இரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டு திரையிடப்பட உள்ளது.

ஆக்சன் காட்சிகளை மட்டும் கோர்வையாக மாற்றி இந்த படம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கலைப்புலி தானோ கைவண்ணத்தில் உருவாகும் ஆளவந்தான் திரைப்படம் மக்கள் மனதை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எந்தவித அறிவிப்பும் இன்றளவும் வெளியாகவில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews