சென்னையில் முதல் பொதுக்கூட்டம்.. ரசிகர்களுக்கு முக்கிய உத்தரவு.. விஜய்யின் அதிரடி அரசியல் திட்டம்..!

சென்னையில் அடுத்த மாதம் பொதுக்கூட்டம் நடத்த விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு அவர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக சமீபத்தில் பிரபலங்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுகள் நடந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இதனை அடுத்து பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் திட்டம் விஜய் மனதில் இருப்பதாகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை சென்னைக்கு அழைப்பு வந்து விஜய் கையினால் நேரில் பரிசளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த மாதம் சென்னையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த பொதுக்கூட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பதோடு அரசியல் குறித்து அறிவிப்பையும் அவர் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது

மேலும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் வேறு எந்த கட்சியின் உறுப்பினராக இருக்கக்கூடாது என்றும் அவ்வாறு உறுப்பினர்களாக அல்லது நிர்வாகிகளாக இருந்தால் உடனடியாக அந்த பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து விஜய் அரசியலில் களம் குதிக்க போறது உறுதி என தெரிகிறது.

ஆனால் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொது தேர்தல் அவரது இலக்கு இல்லை என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தான் அவரது இலக்கு என்று கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டுக்கு முன்பே அவர் அரசியல் கட்சியை தொடங்கி அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் நியமனம் செய்து பூத்து கமிட்டி வரை நியமிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் ஏற்கனவே ஒரு பெரிய தொகை பட்ஜெட் ஆக ஒதுக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகர்கள் விஜய்யின் அரசியல் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி சேராது என்றும் தனித்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தனது கட்சிக்கு நடிகர் நடிகைகளின் ஆதரவையும் பெற அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் 2026 ஆம் ஆண்டு அரசியல் களத்தில் விஜய்யின் என்ட்ரி உறுதி என்று கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews