ஆளவிடுங்கடா சாமி!.. அறிமுக இயக்குநர்களா அய்யோ வேண்டாம்.. தெறித்து ஓடும் விஜய் தேவரகொண்டா!..

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா அறிமுக இயக்குனர்களை இனிமேல் நம்பப் போவதில்லை என பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நுவிலா எனும் படத்தில் விஜய் தேவரகொண்டாவை அறிமுக நடிகராக கொண்டு வரவில்லை என்றால் அவர் எப்படி தற்போது முன்னணி நடிகராக மாறி இருப்பார் என்கிற கேள்விகளை திரையுலகினர் எழுப்பி வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டா பேட்டி:

அறிமுக இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தான் விஜய் தேவரகொண்டா முதல் 100 கோடி வசூல் ஈட்டி தந்த படமாக மாறியது. அதன் பின்னர் அவர் நடித்த எந்த ஒரு படமும் 100 கோடி வசூலை தொடவில்லை.

தொடர்ந்து, திறமையான இயக்குனர்களை நம்பி படங்களில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அறிமுக இயக்குனர்களை நம்பி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் குறைந்தபட்சம் ஒரு படத்தையாவது இயக்கி இயக்குனர்களை நம்பித்தான் நடிப்பேன் என்றும், அறிமுகம் இயக்குனர்கள் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது ஒன்றுமே தெரியாமல் வருகின்றனர். அவர்கள் செட்டில் செட் ஆவதற்கு ரொம்ப காலம் எடுத்துக் கொள்கிறது.

நான் என்னுடைய நேரத்தையும், காலத்தையும் இதுபோன்ற புதியவர்களை நம்பி வீணடிக்க விரும்பவில்லை என பேசியுள்ளார். விஜய் தேவரகொண்டா அடுத்ததாக கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் நடித்துள்ளார். அதைப் படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். ஜெகபதி பாபு உள்ளிட்ட தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கடைசியாக இயக்குனர் பாசுரம் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளியான சர்க்கார் வாரி பாட்டா படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் மகேஷ் பாபுக்கு மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது.

விரைவில் வெளியாகவுள்ள ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. தமிழில் விஜய் தேவரகொண்டாவே டயலாக் எல்லாம் பேசி நடித்துள்ளார். ஆனால், படத்தின் டிரெய்லர் பெரிதாக கவர்வது போலவே தெரியவில்லை என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...