கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போ?.. விஜய் போட்ட வேறலெவல் ட்வீட்!..

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்த தளபதி விஜய் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எத்தனை மணிக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் எத்தனை மணிக்கு?:

நடிகர் விஜய் விரைவில் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்லப் போகிறார். அதற்காக தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியையும் தொடங்கியுள்ளார். கோட் மற்றும் தளபதி 69 படங்களுடன் சினிமாவை மூட்டை கட்டி தூக்கி போட்டுவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறப் போவதாக நடிகர் விஜய் தனது அரசியல் நுழைவின் போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

அப்பா சந்திரசேகர் மூலமாக சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானவர் விஜய். ஆரம்பத்தில் விஜய்யை ஹீரோவாக்க பல முயற்சிகளை சந்திரசேகர் மேற்கொண்டு வந்தார். விஜய் வைத்து தொடர்ந்து படங்களையும் இயக்கினார்.

அப்பா சந்திரசேகர் படங்களில் நடித்து வந்த விஜய்க்கு பெரிதாக வெற்றிகள் கிடைக்கவில்லை. இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்படம் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. அதன் பின்னர் மற்ற இயக்குனர்கள் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு படத்தை தமிழில் கில்லி என ரீமேக் செய்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார் விஜய். திருப்பாச்சி, சிவகாசி, துப்பாக்கி, தெறி, மெர்சல், கத்தி, பிகில், மாஸ்டர், வாரிசு மற்றும் லியோ என வரிசையாக விஜய் நடித்து வெளியான படங்கள் தமிழ் சினிமாவின் மார்க்கெட்டையும் பெரிய அளவில் உயர்த்தி உள்ளன.

200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வரும் நடிகர் விஜய் திடீரென சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு செல்லப் போவதாக அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த வரும் கோட் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்தப் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக போவதாக நடிகர் விஜய் தற்போது சமூக வலைதள பக்கங்களில் அந்தப் பாடலின் போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விஜய்க்கு புதிய கீதை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அந்தப் படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து கோட்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் முதல் சிங்கிள் எப்படி இருக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த விஜய ரசிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...