விக்னேஷ் சிவனை தொடர்ந்து மீண்டும் பில்லா இயக்குனருடன் இணையும் அஜித்! தல மாஸ் அப்டேட் தான்!

அஜித் நடிப்பில் தற்போழுது துணிவு படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து மிகப் பெரும் பொருட்செலவில் படம் உருவாகி வருகிறது.

வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் அசுரன் புகழ் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பிரேம்குமார், வீரா மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் முழுமையான நெகட்டிவ் ரோலில் அஜித் நடித்து வருகிறார், அதை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கிறார் அஜித். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருட தொடக்கத்தில் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ரஞ்சிதமே! ரஞ்சிதமே! என விஜய் பாடிய வாரிசு படத்தின் பாடல் புரோமோ இதோ

aji 633

அனிருத் இசையமைக்கும் அஜித் 62 வது படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அஜித்தின் அடுத்தடுத்த மாஸ் அப்டேட்களுக்காக ஆவலுடன் காத்து வருகின்றனர்.

விஷ்னு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி படத்தின் காதல் குஸ்தி அப்டேட்!

இந்நிலையில் அஜித்தின் 63 வது படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. 63வது படத்திற்காக விஷ்ணு வர்தனுடன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது, உறுதியான தகவல் வெளியாக வில்லை. இவர்கள் இருவரும் முன்னதாக பில்லா படத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.