அஜித் பிறந்த நாளில் வெளியான அதிரடி அறிவிப்பு.. டைட்டிலை அறிவித்த லைகா நிறுவனம்..!

அஜித்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அவர் நடிக்க இருக்கும் 62 ஆவது படத்தின் டைட்டிலுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக நேற்று செய்திகள் வெளியானது. அந்த வகையில் இன்று அதிகாலை 12 மணிக்கு லைகா நிறுவனம் அஜித்தின் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜீத் நடிக்க இருக்கும் 62 வது திரைப்படத்திற்கு ’விடாமுயற்சி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

vida muyarchi

அஜீத் தற்போது நேபாளம் உட்பட வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் இருக்கும் நிலையில் அவர் இம்மாத இறுதியில் சென்னை திரும்புவார் என்றும் அதன் பிறகு அடுத்த மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூற ப்படுகிறது.

விடாமுயற்சி படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அதேபோல் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர்களிடமிருந்து தகவல் வெளியாகி உள்ளன. அஜித் மற்றும் மகிழ்திருமேனி ஆகிய இருவரும் முதல் முறையாக இணைவதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அனேகமாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...