விபூதியை மூன்று கோடுகளாய் இடுவது ஏன்?!


இப்பலாம் கண்ணுக்கே தெரியாம குட்டியூண்டாய் விபூதியை இட்டுக்கொண்டு செல்வது ஃபேஷனாகி விட்டது. இன்னும் சிலர் ஒரு வரியில் விபூதியை இட்டுக்குவாங்க, அதுலாம் தவறு. விபூதியை மூன்று கோடுகளாய்தான் இழுக்கனும். அதுக்கு காரணம்

முதல் கோட்டில் அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மஹாதேவன் ஆகியவையெல்லாம் அடங்கி உள்ளது.

இரண்டாவது கோட்டில் உகாரம், தக்ஷிணாக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இக்கோட்டில் இருக்கின்றனர்.

மூன்றாவது கோட்டில் மகாரம், ஆஹவனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இருக்கின்றனர்.

அதனால் எப்போதுமே மூன்று கோடுகளாய் விபூதியை இட்டுக்கொள்வதே நன்மை பயக்கும்.

Published by
Staff

Recent Posts