வெற்றிமாறன் இயக்குனர் ஆவதற்கு முன்பே தாயார் கண்ட கனவு.. தேசிய விருது மேடையில் விழுந்த ஆனந்த கண்ணீர்..

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன். பாலு மகேந்திராவிடம் அசிஸ்டன்ட் இயக்குனராக பணிபுரிந்து வந்த வெற்றிமாறன், தனுஷ் நடிப்பில் உருவான பொல்லாதவன் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷுடன் திவ்யா ஸ்பந்தனா, சந்தானம், கருணாஸ், கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

தனுஷின் பல்சர் பைக், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே நடித்திருந்தது. முதல் படத்திலேயே தனது தாக்கத்தை தமிழ் சினிமாவில் உண்டு பண்ணிய இயக்குனர் வெற்றிமாறன், இரண்டாவது படத்திலும் தனுஷுடன் இணைந்திருந்தார். இவர்களின் கூட்டணியில் உருவான ஆடுகளம் திரைப்படம், மொத்தம் 6 தேசிய விருதுகளை வென்று இந்திய அளவில் கவனம் பெற்றிருந்தது.

இதற்கடுத்து விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள வெற்றிமாறன் இதுவரை தோல்வியே காணாத ஒரு இயக்குனர் ஆவார். அவர் இயக்கத்தில் உருவான வடசென்னை வெளியான நாள் முதலே அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்களும் ஏங்கி வருகின்றனர். அடுத்தடுத்து திரைப்படங்களிலும் வெற்றிமாறன் கமிட்டாகி வருவதால் வடசென்னை 2 திரைப்படத்தின் பணிகளும் தள்ளிப் போன வண்ணம் உள்ளது.
Vetri Maaran on Asuran's win at National Film Awards: It's a surprise and a bonus for me | Tamil Movie News - Times of India

வெற்றிமாறன் அடுத்ததாக விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இதற்கடுத்து சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தையும் அவர் இயக்குகிறார். இதன் பின்னர் தான் வடசென்னை 2 குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷை வைத்து நான்கு படங்கள் இயக்கியுள்ள வெற்றிமாறன், காக்கா முட்டை உள்ளிட்ட பல தரமான தமிழ் சினிமாக்களை தயாரிக்கவும் செய்துள்ளார். அதே போல, வெற்றிமாறன் இயக்கும் படங்கள் விருதுகளை வெல்லக்கூடிய தன்மை உடையதாக இருந்தாலும் கமர்ஷியலாகவும் வெற்றி பெறக் கூடிய வகையில் அமைந்திருப்பது தான் அவரது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தனது தாயின் ஆசையை வெற்றிமாறன் நிறைவேற்றியது தொடர்பான செய்தி பலரையும் மனம் உருக வைத்துள்ளது. வெற்றிமாறனின் தாயாரான மேகலா சித்ராவேல், ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் பல புத்தகங்களை எழுதி உள்ள நிலையில், ஒரு முறை நேர்காணலில் தனது மகனும் இயக்குனருமான வெற்றிமாறன் குறித்து பேசி இருப்பார்.

“சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை ஜனாதிபதி கையில் இருந்து நம் மகன் வாங்க போகிறான். நாம் அங்கே உட்கார்ந்து அதை பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்க போகிறோம். இது நடக்கும் என என் கணவரிடம் சொன்னேன். இதன் பின், சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது வெற்றிமாறன் என சொன்னதும் நான் ஐயோ, ஐயோ என மட்டும் தான் கத்தினேன். எனக்கு வேறு எதுவும் பேச வரவில்லை.
VETRI MOTHER

அம்மா என விருது வென்ற பின் வெற்றிமாறன் கூப்பிட்டதும் கண்ணீரே வந்து விட்டது. அவனுக்கும் கண் கலங்கி இருக்கும். அவன் என் காலில் விழுந்ததும் நான் அழ, என் கண்ணீர் அவன் தலையில் விழுந்தது” என உணர்ச்சி பொங்க தெரிவித்தார் மேகலா சித்ரவேல். அம்மாவின் ஆசையை பல கடின உழைப்புகளுக்கு பின் வென்று தாய்க்கு பெருமையும் சேர்த்துள்ளார் வெற்றிமாறன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.