யாரிடமும் சொல்லாத ஒன்றை வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் சொன்ன ஜெயலலிதா.. பிரபல நடிகருக்கு கிடைத்த பாக்கியம்..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் பலரின் ஃபேவரைட் ஆக இருக்கும். அந்த வகையில், 90 ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி என்றால் நிச்சயம் ‘மீண்டும் மீண்டும் சிரிப்பு’ நிகழ்ச்சியை சொல்லலாம். சுமார் 11 ஆண்டுகள் இந்த காமெடி நிகழ்ச்சி வார இறுதியில் ஒளிபரப்பாகி வந்தது. மேலும் இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய வெற்றி அடைய காரணமாக இருந்தவர் அதில் நடித்த பழம்பெரும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி தான்.

வெண்ணிற ஆடை என்ற படத்தில் அவர் அறிமுகமானதால் அந்த பெயரும் உடன் சேர்ந்து கொண்டது. தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் மற்றும் காமெடியனான வெண்ணிற ஆடை மூர்த்தி, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், நாகேஷ் என அந்த காலத்து பிரபலமான நடிகர்கள் தொடங்கி இந்த காலத்தில் திரையில் ஜொலித்து வரும் விஜய், அஜித், ஆர்யா, சிவகார்த்திகேயன் என பல நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் பேசும் காட்சிகளில் நடித்துள்ள வெண்ணிற ஆடை மூர்த்தி, வாயில் அப்படியே சத்தத்தை உருவாக்கி கொண்டு, காமெடி வசனங்கள் பேசுவதில் தேர்ந்த கில்லாடி. எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற படத்தில் வரும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் காட்சிகள் இந்த காலத்து சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று.

அதே போல, அவர் திரைப்படம் நடிக்க ஆரம்பித்த காலத்தில், அவருக்கும் மறைந்த புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும் சிறந்த நட்பு இருந்து வந்தது. அப்படி ஒரு முறை, வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் ஏதேனும் உதவி வேண்டும் என்றால் என்னிடம் கேளுங்கள் என ஜெயலலிதா கூறி உள்ளார். இதற்கு பதில் சொன்ன வெண்ணிற ஆடை மூர்த்தி, ‘எனக்கு வேறு எந்த உதவியும் வேண்டாம். எனக்கு எப்போதெல்லாம் உங்களை பார்க்க வேண்டும் என தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒரு 5 நிமிடம் உங்களை தொந்தரவு செய்யாமல் நின்று பார்த்து விட்டு போய் விடுகிறேன்’ என கோரிக்கை வைத்துள்ளார்.

இதனை கேட்டதும், தனது பெர்சனல் எண்ணை வெண்ணிற ஆடை மூர்த்திக்கு கொடுத்து ‘எப்போதெல்லாம் என்னை பார்க்க வேண்டும் என தோன்றுகிறதோ அப்போது எனக்கு போன் செய்யுங்கள்’ என கூறி உள்ளார். அதே போல, சுமார் 15 – 16 முறை ஜெயலலிதாவை அவரது வீட்டிலேயே சந்திக்கும் பாக்கியமும் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு கிடைத்துள்ளது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஜெயலலிதா தனது பெர்சனல் எண்ணை வேறு யாரிடமும் கொடுத்ததில்லை என்பது தான்.

இத்தனை நட்பாக ஜெயலலிதா இருந்த போதும் ஒருமுறை கூட கட்சியில் சேரும்படி தன்னை அறிவுறுத்தியதில்லை என நேர்காணல் ஒன்றில் வெண்ணிற ஆடை மூர்த்தி மனம் நெகிழ்ந்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.