வீட்டிலேயே செய்யலாம் மொறுமொறு சிக்கன் கோலா உருண்டை..

சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன், சிக்கன் ஃப்ரை, சிக்கன் குழம்பு, சிக்கன் 65 என விதம்விதமா சாப்பிட்டாலும் அசைவ பிரியர்களுக்கு கோலா உருண்டைக்கு ஏங்குவது உண்டு. இந்த கோலா உருண்டையை கடைகளில் வாங்கி சாப்பிடாமல் அதே ருசியில் வீட்டிலேயே செய்யலாம்..

தேவையான பொருட்கள்..

எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் – கால் கிலோ

முட்டை – 1

பொட்டுக்கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

சோம்பு – 3 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய மல்லி இலை- 2 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய புதினா – 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

மஞ்சள்,சீரக,சோம்பு,கரம்மசாலா – தலா கால்டீஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

3ede07d86fd045467c743a9b9ae42a79

செய்முறை..

சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டி, உப்பு,மஞ்சள் தூள், இஞ்சி பூண்டுபேஸ்ட் சேர்த்து வேக வைத்து ஆற வைக்கவும். பொட்டுக்கடலையை பொடித்து கொள்ளவும்.

வேக வைத்து தண்ணீர் வடிகட்டி ஆறிய சிக்கனை மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி கொரகொரப்பாக எடுக்கவும். அடுத்து மிக்ஸியில் வெங்காயம்,பச்சை மிளகாய்,புதினா, மல்லி இலையையும் பர பரவென்று சுற்றி எடுக்கவும்.அரைத்த சிக்கன், பொட்டுக்கடலை மாவு, முட்டை, அரைத்த வெங்காயம்,மல்லி,புதினா,பச்சை மிளகாய் விழுது,மிளகு,சீரக,சோம்பு,கரம் மசாலா தூள்களை சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து வைக்கவும்.

அவற்றை சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும்.கடாயில் தேவைக்கு எண்ணெய் விட்டு நன்கு காயவிட்டு, அதில் கோலா உருண்டைகளை போட்டு மிதமான தீயில் சிவற பொரித்து எடுக்கவும்.பொரிக்கும் பொழுது எண்ணெய் அவ்வளவாக குடிக்காது.

சுவையான சிக்கன்கோலா உருண்டை ரெடி. இதனை அப்படியேயும் சாப்பிடலாம். அல்லது கிரேவியாக்கியும் சாப்பிடலாம். வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே சாஃப்டாகவும் அருமையாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.