வீட்டில் உள்ள சின்ன சின்ன வாஸ்து குறைப்பாட்டை போக்கும் எளிய பரிகாரம்…

என்னதான் வாஸ்துப்படி வீட்டு வரைப்படம் வரைந்து, நல்ல நேரம் பார்த்து பூமி பூஜை போட்டு வீடு கட்டி முடித்து கணபதி ஹோமத்துடன் குடி புகுந்தாலும் கண்ணுக்கு தெரியாமல் சின்ன சின்ன வாஸ்து குறைபாடு இருக்கத்தான் செய்யும். வாஸ்து குறைபாடினால் தம்பதியருக்குள் ஒற்றுமையின்மை, ஆரோக்கிய குறைபாடு, வாரிசு இல்லாமை, கடன் தொல்லை என எதாவது ஒரு இன்னல் இருந்துக்கொண்டே இருக்கும். அவற்றுக்கு நிவாரணமாய் எளிய பரிகாரங்களை செய்து வந்தால் பாதிப்பிலிருந்து மீண்டு வரலாம்.


வீட்டில் பப்பாளி மரம், கறிவேப்பிலை மரம் ஆகியவற்றை வைத்து மிகவும் கவனமுடன்  வளர்த்துவர கணவன் மனைவி ஒற்றுமை வளரும். பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் குறிக்கும் …

ஒருவகை சப்பாத்தி செடிகளை அழகுக்காகவும், சீன வாஸ்துக்காவும் வீட்டில் வைப்பது இப்பொழுது பேஷனாக உள்ளது. அதுமாதிரியான முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.

ஜாதி முல்லை , மல்லிகை ,பாதிரி , தாமரை, தும்பை ,பாரிஜாதம், சாமந்தி போன்ற விநாயகர் மலர்களை வீட்டின் எல்லைக்குள் வளர்ப்பது மனை தோசத்தை சரி செய்யும் .

வீட்டில் தென்னை மரத்தை  ஒற்றை எண்ணிக்கையில்  வளர்க்க கூடாது ,தென்னை மரத்தை ஜோடியாகத்தான் வளர்க்க வேண்டும் …

நன்றாக வளர்ந்த வேப்பமரத்தின் கிளைகளை கழிக்கலாம். தவறில்லை. ஆனால்,  அது மீண்டும் வளராதவாறு வெட்டக்கூடாது. 
அப்படி செய்தால் வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம் ,ஆரோக்கியம் கெட்டு விடும் .
துணை இல்லாத  ஒற்றை வாழைமரம் அல்லது மறு கன்று இல்லாத வாழை மரத்தை வெட்டக்கூடாது. அப்படி வெட்டுபவருக்கு வம்ச விருத்தி இருக்காது .

ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில வீடு கட்ட கூடாது ..

வீட்டின் வாசலில் அல்லது நிலைக்கதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது . அதேப்போல் வைக்கோல் போரையும் பார்க்கக்கூடாது. எருக்கஞ்செடியும் பார்க்கக்கூடாது.

அசைவ கழிவுகள் ,மலமூத்திர கழிவு தேக்கம், பழைய துணிகள்,குப்பைகள் வாசலுக்கு நேராக குவிந்திருக்க கூடாது.

 சந்தன முல்லை ,துளசி ,பவளமல்லி ,பன்னீர் செடி ,திருநீர்பத்திரி கற்பூரவள்ளி போன்றவற்றை வீட்டில் வளர்க்க அம்பாளின் அருள் ஆசிகள் கிடைக்கும் .

கோபுரத்தின் நிழல் அல்லது கொடிமரத்தின் நிழல் நம்முடைய மனையின் மீது விழாதபடி வீடு கட்டவேண்டும் .மேலும் பெருமாள் கோவிலின் பின்புறம் சிவன் ,கணபதி கோவில் எதிர் புறம் வீடு கட்டக்கூடாது 

 

பரிகாரங்கள் தொடரும்…

Published by
Staff

Recent Posts