Categories: சமையல்

வீடே மணக்கும் தக்காளி ரசம்


தேவையான பொருட்கள்..

புளி – எலுமிச்சை அளவு வேக வைத்து கரைத்த துவரம்பருப்புத் தண்ணீர் – 2 கப், காய்ந்த மிளகாய் – 3, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், தக்காளி – ஒன்று, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை: 

புளியை ஊற வைத்துக்கொள்ளவும், தனியா, உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து, சீரகம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக்கொண்டு, அத்துடன் தக்காளியை பிசைந்து, அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து உப்பு கலந்து கொதிக்க விடவேண்டும். நன்றாக கொதித்ததும் அத்துடன் பருப்புத் தண்ணீர் சேர்த்து கடுகு, கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு தாளித்து கொட்டவும். விருப்பப்பட்டால் பெருங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.

Published by
Staff

Recent Posts