பருத்திவீரன் சித்தப்புவாக முதலில் நடிக்கவிருந்த பிரபலம் இவரா? சரவணன் தேர்வானது இப்படித்தான்.

2007-ம் ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றையே புரட்டிப்போட்ட வருடம் அது. ஒரே ஒரு படம் ஒட்டுமொத்த உலக சினிமாவின் பார்வையும் தமிழ் சினிமா பக்கம் திரும்பியது. இதற்குக் காரணம் ஒரே ஒரு படம் தான். அதுதான் பருத்திவீரன். ஓர் அறிமுக நடிகருக்கும் மற்றும் இதில் நடித்த பலருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை பருத்திவீரன் கொடுத்தது. படத்தின் வெற்றியை சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

இன்றும் தமிழ் சினிமாவின் மதுரைக் கதைக்களங்களுக்கு அச்சாரம் இட்ட திரைப்படம் அது. மேலும் 16 வயதினிலே படத்திற்குப் பிறகு ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அத்தனை இலக்கணங்களையும் உடைத்தெறிந்து புழுதிக் காட்டிலும், லுங்கியும், பாட்டிலும் கையுமாக கார்த்தி இதில் பருத்திவீரனாக வாழ்ந்திருப்பார் என்றே சொல்லாம்.

இதில் கார்த்திக்கு அடுத்தபடியாக பேசப்பட்டவர் நடிகர் சரவணன். பருத்திவீரனுக்கு முன் சுமார் 20 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவருக்கு எந்தப் படமும் ஓடவில்லை. இதில் என்னஒரு சிறப்பம்சம் என்றால் முதன்முதலில் இளையதளபதி பட்டமும் இவருக்குத்தான் வழங்கப்பட்டது. தொடர்ந்து சினிமா வாய்ப்பின்றி இருந்தவரை இயக்குநர் பாலா நந்தா படத்தில் பெரியவரின் மகனாக நடிக்க வைத்தார். அதற்குப் பிறகும் வாய்ப்புகள் இல்லாததால் அமீரிடம் வாய்ப்புக் கேட்டுள்ளார்.

எதேச்சையாகக் கேட்ட டைரக்டர்.. உடனே ஓ.கே. சொல்லிய தளபதி விஜய்.. சூப்பர் ஹிட்டான லவ் ஸ்டோரி!

ஆனால் பருத்திவீரன் சித்தப்பு கதாபாத்திரத்திற்காக முதலில் இயக்குநர் அமீர் தேர்ந்தெடுத்தது நடிகர் பசுபதியைத் தான். அந்நேரங்களில் அவரிடமிருந்து முறையான தொடர்பு இல்லாததால் பசுபதிக்குப் பதிலாக யாரை நடிக்கவைக்கலாம் என்று அமீர் எண்ண சரவணனின் ஞாபகம் வந்திருக்கிறது. அதன்பின் அவரை செவ்வாழை சித்தப்புவாக நடிக்க வைத்தார். அப்போது சரவணன் அமீரிடம் இதற்கு முன் நான் ஹீரோவாக நடித்தவன். எனவே நல்ல கதாபாத்திரம் கொடுங்கள் என்று கேட்டாராம்.

அமீர் முதலில் சம்பத், பொன்வண்ணன் பிளாஷ்பேக் காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்க சரவணன் வேலையே இல்லாமல் இருந்திருக்கிறார். அதன்பின் சந்தேகம் எழவே, அமீரிடம் கேட்க, இது பிளாஷ்பேக் காட்சிகள் தான். இதன்பிறகே லைவ் காட்சிகள் ஷூட்டிங் தொடங்கும் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

அதன்பின் படம் முழுக்க கார்த்தி-சரவணன் கூட்டணி தொடர்ந்திருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு சரவணனை அனைவரும் சித்தப்பு என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அவரும் தற்போது பல படங்களில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் அடுத்த ரவுண்டில் கலக்கி வருகிறார்.

Published by
John

Recent Posts