பிரகாஷ்ராஜுக்கு விருது கொடுக்கப்போகும் திருமாவளவன்.. சந்திப்பின் ரகசியம் இதானா?

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடந்த மாதம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக தான் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியிலும், கூட்டணிக் கட்சிக்காக தமிழகமெங்கும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில வருடந்தோறும் சமூகம், அரசியல் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம். இந்த விருதினை மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், சித்தராமையா, கி.வீரமணி, அருந்ததிராய் உள்ளிட்ட  நாட்டின் பல தலைவர்களும், சமுதாய மேன்மைக்காக போராடும், குரல் கொடுக்கும் போராளிகளும் பெற்றுள்ளனர்.

அதன்படி 2024-ம் ஆண்டிற்கான விடுதலை சிறுத்தைகள் விருதினை அறிவித்துள்ளார் திருமாவளவன். அதில் பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தினை சேர்ந்த வழக்கறிஞர் அருள் மொழிக்கும், மார்க்ஸ் மாமணி விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனுக்கம், காமராசர் கதிர் விருது பேராயர் எஸ்ரா சற்குணத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் உச்சபட்சமாக அம்பேத்கர் சுடர் விருதினை திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் முதன்முதலாக எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவியாளராக சேர்ந்தது எப்படி தெரியுமா?

தொடர்ந்து பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வரும் பிரகாஷ்ராஜ் அண்மையில் லோக்சபா தேர்தலில் வாக்களித்து விட்டு அப்போதும் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார். அதற்கு சில தினங்களுக்கு முன்பாக தொல். திருமாவளவனும், பிரகாஷ்ராஜும் சந்தித்துக் கொண்டு நீண்ட நேரம் உரையாடினர்.

மேலும் மதச்சார்பின்மைக்காக தொடர்ந்து போராடி வரும் பிரகாஷ்ராஜ் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் அம்பேத்கர் சுடர் விருதுக்காக தேர்வாகி இருப்பது சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி அயோத்திதாசர் ஆதவன் விருது பேராசிரியர் ராஜ் கவுதமனுக்கும், காயிதேமில்லத் பிறை விருது சிக்கந்தர் என்பவருக்கும், செம்மொழி ஞாயிறு விருது கல்வெட்டியலாளர் சுப்பராயலுக்கும் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள் வழங்கும் விழாவானது வருகிற 25.05.2024 அன்று சென்னையில் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த 2007-ம் ஆண்டுமுதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...