Categories: சமையல்

வாழைப்பழம் பிடிக்காதா?! அப்ப, இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க.



சிலருக்கு வாழைப்பழம் சாப்பிட பிடிக்காது. வாழைப்பழத்தில் அதிக சத்துக்கள் இருப்பதால் வாழைப்பழம் பிடிக்காதவர்களையும் சாப்பிட வைக்க வாழைப்பழம் சாலட் செய்து தரலாம். இப்போது அந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த வாழைப்பழம் சாலட் செய்முறையினை பார்க்கலாம்!!

தேவையான பொருட்கள்

மஞ்சள் வாழைப்பழம் – 2
புளிக்காத தயிர் – 5 மேசைக்கரண்டி 
தேன் – 3 மேசைக்கரண்டி
தேங்காய்ப் பூ – 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

கொத்தமல்லியை கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.  அதிகம் கனியாத வாழைப்பழத்தை தோலை நீக்கி விட்டு வட்டமாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பழம, தேன், தயிர், தேங்காய் பூ, ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கலக்கவும். கடைசியாக கொத்தமல்லி இலைகளை போட்டு பரிமாறவும்.

இதனால் வாழைப்பழத்தில் இருக்கும் சத்துகள் அப்படியே கிடைக்கும். தயிர் சேர்த்திருப்பதால் உடலுக்கு குளிர்ச்சியும், கோடை வெப்பத்தை சமாளிக்கவும் உதவும்

குறிப்பு :

தயிர் அதிகம் புளிக்காத, கெட்டியாக இருத்தல் வேண்டும்.

Published by
Staff

Recent Posts