செட்டை விட்டு வெளியே போ.. ரஜினிக்கு ஏற்பட்ட அவமானம்!.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா..?

Rajinikanth: ரஜினி சினிமாவில் அப்பொழுதுதான் நடிகராக அறிமுகமாகி சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார். தனக்கு பிடித்த திரையுலகில் எப்படியாவது ஒரு நல்ல நடிகராக வரமாட்டோமா..? என்று இயங்கிய காலங்கள் அது. இதனால் மனதிற்குள் எந்த மொழியில் நடிப்பது எதை தேர்ந்தெடுப்பது என்று குழம்பிக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் திரையுலகம் அவரே எதிர்பாக்காத வகையில் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது.

அந்த காலகட்டத்தில் திரையரங்கில் அவர் பார்த்து கைத்தட்டி விசில் அடித்து ரசித்த திரையுலக மாமேதையோடு நடிக்கும் வாய்ப்பு அது. கன்னட திரை உலகில் அண்ணவரு என்று செல்லமாக அழைக்கப்படக்கூடிய ராஜ்குமார் என்கிற மாமேதையோடு நடிக்கும் வாய்ப்பு அது. அப்படத்தின் பெயர் “கிரிகன்யே” என்கிற பட வாய்ப்பு கிடைத்ததும் அந்த புதுமுக நடிகரான ரஜினி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவருடன் படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற செய்தி கேட்டதிலிருந்து முதல் நாள் ஷூட்டிங் வரை அவர் தூங்கவே இல்லையாம்.

முதல் நாள் ஷூட்டிங்கில் ராஜகுமாரை கண்டதும் ரஜினி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அப்படி சந்தோஷத்தின் உச்சியில் இருக்கும் பொழுது திடீரென்று அவரே எதிர்பாக்காத வகையில் தயாரிப்பு நிறுவனம் அவர் தலையில் பெரிய பாறாங்கல்லையே தூக்கி போட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அன்று அவர் புதுமுக நடிகராக இருந்ததால் தயாரிப்பு நிறுவனம் அவரிடம் வந்து இந்த படத்தில் நீங்கள் இல்லை. இதற்கு பதில் வேறு ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் நடிக்கப் போகிறார். அதனால் நீங்கள் இந்த செட்டை விட்டு செல்லலாம்.

என்ற செய்தியை கேட்டதும் ரஜினி தொங்கிய முகத்தோடு வெளியேற தொடங்கினார். தூரத்தில் இருந்து இதை கவனித்த ராஜ்குமார் உடனே அவரை அழைத்தார். பின்னர் தயாரிப்பு நிறுவனத்தின் நியாயங்களை உணர்ந்த அவர் சிறு துளி குங்குமத்தை எடுத்து ரஜினியின் நெற்றியில் வைத்தார். அதன் பின்னர் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில்,” இந்த படத்தில் இருந்து நீங்கள் வெளியேற்றப்பட்டதால் வருத்தம் அடைய வேண்டாம். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நீங்கள் கூடிய விரைவிலேயே பேசப்படும் நடிகராகவீர்கள்”.

”லட்சக்கணக்கான மக்கள் உங்கள் ரசிகனாக இருப்பார்கள். பல இயக்குனர்கள் கால் ஷீட்டுக்காக உங்கள் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருப்பார்கள். யார் கண்டார்..? அப்போது நானே உங்களிடம் வாய்ப்பு கேட்டு வருவேனோ என்னவோ..? ” என்று கூறி வழி அனுப்பி வைத்தார். அதேபோல் காலம் மாறியது. ரஜினி இந்திய சினிமாவின் அடையாளமாகவே காணப்பட்டார். ராஜ்குமார் அன்று சொன்னது போல ரஜினியை தேடிப் போனார். அவரின் மகன் புனித் ராஜ்குமார் படமான ”அப்பு” வெற்றி விழாக்கு தலைமை தாங்க கேட்டு சென்றுள்ளார். பின்னர் ரஜினியும் தலைமை ஏற்று அந்த விழா சிறப்பாக நடந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.