வாரிசு, துணிவு படத்தை ஓரம் கட்டிய ரஜினி! தலை சுற்றும் முதல் நாள் கலெக்சன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகிய நிலையில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

முன்னதாக பாடல்கள் வெளியாகி ட்ரெண்டிங்கான நிலையில் நேற்று வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை தலையை சுற்ற வைத்துள்ளது. அதன்படி உலகளவில் இப்படம் 90 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே 26 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டு இதுவரை வெளியான திரைப்படங்களின் வசூலை இந்த படம் முறியடித்துள்ளது.

4 கோடி மதிப்புள்ள லக்சூரி காரை ஓட்டும் ரஜினிகாந்த்! சும்மா ஸ்டைலான வீடியோ..

மேலும் தொடர்ந்து வார இறுதி நாட்கள், சுதந்திர தினம் என அடுத்தடுத்து விடுமுறை தருவதால் பாக்ஸ் ஆபீஸை ரஜினியின் படம் கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு தமிழ்நாட்டில் முதல் நாள் 24 கோடியே 59 லட்சம் வசூல் செய்துள்ளது. அதை தொடர்ந்து வாரிசு 21 கோடியே 37 லட்சம் வசூலை பெற்ற நிலையில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் அதனை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...