ராசாவே உன்னை காணாத நெஞ்சு.. அந்த நடிகையா இது..? இவங்க மகளும் பிரபல நடிகையா?

தமிழ் சினிமாவில் அடிதடி, ஆக்சன் என வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்தை அப்படியோ காதல் தோல்வி இளைஞனாக மாற்றி அவரின் நடிப்புத் திறனை வெளிக் கொண்டுவந்த படம் தான் வைதேகி காத்திருந்தாள். ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இளையராஜா தான் வேறொரு படத்திற்காக வைத்திருந்த மெட்டுக்கள் முழுவதையும் இந்தப் படத்திற்காக கேட்டு வாங்கி அத்தனை பாடல்களையும் ஹிட் கொடுத்தார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல்தான் “ராசாவே உன்னை காணாத நெஞ்சு..“. தன் காதலனை நினைத்து காதலி பாடும் இந்தப் பாடலில் விஜயகாந்தை உருகி உருகி காதலிக்கும் முறைப் பெண்ணாக நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை பரிமளா ஜோஷாய். இந்தப் படத்தில் அவரது நடிப்பு மிக எதார்த்தமாக இருக்கும். மாமனை நினைத்து உயிரைவிடும் காட்சியில் ரசிகர்களை அழ வைத்திருப்பார்.

கே. பாலச்சந்தரின் தப்புத் தாளங்கள் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வைதேகி காத்திருந்தாள் படத்தின் மூலம் உச்சத்திற்குக் சென்றார்.

அறிஞர் அண்ணா என்று தெரியாமல் அவருக்கே மேக்கப் போட்டு பல்பு வாங்கிய எஸ்.எஸ்.ஆர்..

இந்தப் படத்தில் இவரின் கதாபாத்திரத்தின் பெயரே வைதேகி என்று இருந்ததால் இப்படம் இவருக்கு நல்ல புகழைக் கொடுத்தது. தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்தவர் பின் கன்னட திரையுலகில் அதிக படங்களில் நடித்தார். இவரின் சமீபத்திய புகைப்படம் இணையதளங்களில் வைரலானது. அட நம்ம வைதேகியா என்று ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தவர்களுக்கு அடுத்து ஒரு இன்ப அதிர்ச்சி.

தமிழில் காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பின் சில படங்கள் நடித்த நடிகை மேக்னா ராஜ் இவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் பின்னர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை மணந்து கொண்டு சினிமாவிற்கு முழுக்குப் போட்டார். ஆனால் விதியின் துரதிர்ஷ்டம் சிரஞ்சீவி சார்ஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

தற்போது தாய் பரிமளா ஜோஷாயுடன் தனது குழந்தையையும் வைத்துக் கொண்டு பெங்களுரில் வாழ்ந்து வருகிறார்கள். மேக்னா ராஜுவின் கணவர் சிரஞ்சீவி சர்ஜா பிரபல நடிகர் அர்ஜுனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.