இரண்டு பாடல்களில் ஒரே வரி.. அஜித், துல்கர் படத்தில் இருந்த கனெக்சன்.. வைரமுத்து செய்த மேஜிக்.. இதை நீங்க கவனிச்சு இருக்கீங்களா?

தமிழ் சினிமாவின் சிறந்த பாடலாசிரியர்கள் பெயரை பட்டியலிட்டால் கவிஞர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், தாமரை என பலரது பெயர்களை சொல்லிக் கொண்டே போகலாம். இதில், மிக முக்கியமான ஒரு கவிஞர் என நிச்சயம் வைரமுத்துவை கைகாட்டி விடலாம். இளையராஜா இசையில் பாடல் எழுத தொடங்கிய வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, டி இமான், சந்தோஷ் நாராயணன் என ஒவ்வொரு காலத்திலும் பிரபல இசையமைப்பாளராக இருக்கும் பலருடனும் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பாடல்கள் எழுதி வரும் வைரமுத்து, சூழ்நிலைகிக்கேற்ப ஒரு கதையை பாடலுக்கு நடுவில் சொல்வதில் கில்லாடி. அப்படி அவர் செய்த அற்புதம் குறித்து நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இதே போல, நதி மற்றும் பெண் என்பவளை ஒற்றுமைப்படுத்தி ரிதம் படத்தில் வைரமுத்து எழுதிய தீம்தனனா தீம்தனனா பாடலின் வரிகள் எத்தனை தடவை கேட்டாலும் நம்மை புல்லரிக்க வைக்கக் கூடிய வகையில் இருக்கும்.

அப்படி இருக்கையில், இரண்டு பாடல்களில் ஒரே வரியை அப்படியே வைரமுத்து பயன்படுத்திக் கொண்டது தொடர்பான ஒரு செய்தியை தான் தற்போது பார்க்கப் போகிறோம். அஜித் குமார் மற்றும் ஷாலினி ஆகியோர் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் அமர்க்களம். இதன் பின்னர் அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Amarkalam movie

இந்த படத்தை சரண் இயக்கி இருந்த சூழலில், பரத்வாஜ் இசையில் உருவான அனைத்து பாடல்களுமே பட்டித் தொட்டியெங்கும் ஹிட்டடித்திருந்தது. அதிலும் எஸ்பிபி பாடியிருந்த ‘மேகங்கள் என்னைத் தொட்டு போவதுண்டு’ பாடலும் அதிக கவனம் ஈர்த்தது. இந்த பாடலின் வரிகளை வைரமுத்து எழுதி இருந்த சூழலில், அதில் ஒரு இடத்தில், ‘பிரிவொன்று நேருமென்று அறியும் பெண்ணே, என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்’ என அஜித் பாடுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதே வரியை மற்றொரு படத்தின் பாடலில் அப்படியே பயன்படுத்தி இருப்பார் வைரமுத்து.

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ‘ஓகே கண்மணி’ என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் கதைப்படி துல்கர் மற்றும் நித்யா மேனன் ஆகிய இருவரும் திருமணம் செய்யக் கூடாது என முடிவு எடுத்து காதலித்து வருவது போன்று கதை நகரும். ஆனால், இறுதியில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள விருப்பப்படும் போது வரும் பாடல் தான், ‘தீரா உலா’.
Ok Kanmania

இதில் கதாநாயகி நித்யா மேனன் பாடும் வரிகளாக, ‘பிரிவொன்று நேருமென்று தெரியும் கண்ணா, அதனால் என் பிரியத்தை ஒரு போதும் குறைக்க மாட்டேன்’ என அமர்க்களம் படத்தில் நாயகனுக்கு தோன்றும் வரிகள் நாயகிக்கு ஓகே கண்மணியில் வருவது மட்டும் தான் வேறுபாடு. இப்படி ஒரே வரியை இரண்டு படங்களின் கதை நகர்வின் காரணத்திற்காக வைரமுத்து பயன்படுத்திய விதம், பலரையும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...