அவரு என்ன அமெரிக்காவுல இருந்தா வந்திருக்காரு..? மாரி செல்வராஜுக்கு வக்காலத்து வாங்கிய வைகைப் புயல்!

மிக்ஜாம் புயலால் சீரழிந்த சென்னையின் பல இடங்களில் இன்னமும் வெள்ள நீர் வடியாத நிலையில் அடுத்த 15 நாட்களுக்குள் இயற்கை தனது கோர முகத்தை தென் தமிழகத்தில் காட்டியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் மாமழையாக பொழிந்து தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், தென்காசி ஆகிய மாவட்டங்களைப் பதம் பார்த்தது. இந்தியாவையே உலுக்கி எடுத்த இந்த இயற்கைப் பேரழிவில் கோடிக்கணக்கான பொருட்கள் நாசமானது.

களத்தில் இராணுவம் இறங்கி மீட்புப்பணிகளை துரிதமாக செயல்படுத்தி வருகிறது. பசியால் அழுத குழந்தைக்குக் கூட பால் கொடுக்க முடியாத சூழ்நிலையில் மக்கள் தவித்தனர். தற்போது பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் வேளையில் மீட்புப் பணிகளில் அரசுடன் கைகோர்த்து களத்தில் இறங்கினார் நெல்லை சீமை மண்ணுக்காரர் இயக்குநர் மாரி செல்வராஜ்.

அமைச்சர் உதயநிதிக்கு இவர் கோரிக்கை விடுக்க களத்தில் உதயநிதியும் இறங்கினார். இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து பார்வையிட்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியது. மாரிசெல்வராஜ் இதை அரசியலாக்குகிறார் என்ற தொணியில் கருத்துக்கள் வர அதற்கு மாரி செல்வராஜ் பதிலடி கொடுக்கும் விதமாக “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல… நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என்று பதிலடி கொடுத்தார்.

அப்புவுக்கு ஆப்படித்த கரகாட்டக்காரன்.. கூலாக கமலை ஓவர்டேக் செய்த ராமராஜன்

இதனால் மீட்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவரை அரசியல் களத்தில் பார்க்காதீர் என்று மாரி செல்வராஜுக்கு ஆதரவராக பல திரைப்பிரபலங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குநர் சேரனும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். தற்போது வடிவேலுவும், “அது அவரு ஊர். அவர் ஊர்ல மேடு பள்ளம் எங்க இருக்குன்னு அவருக்குத்தான் தெரியும், ஏன் அவரு போகக் கூடாதா? அவர் ஊருல அவர் போகாம வேற யாரு போறது? அவரு என்ன அமெரிக்காவுல இருந்தா வந்தாரு?” என்று மாரி செல்வராஜுக்கு ஆதரவாக வடிவேலு கொந்தளித்துப் பேசினார்.

எது எப்படிக் கிடந்தாலும் பரவாயில்லை என்று என் மக்கள் என் ஊர், என் சமூகம் என்று மாரி செல்வராஜ் தனது குழுவினருடன் வெள்ள மீட்புப் பணியில் எதையும் காதில் வாங்காமல் தனது பணியைச் செய்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...