வாலியின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக காமராஜர் செய்த பெரும் காரியம்…

தலைவர்கள் எப்போதுமே அவர்களுக்குரிய இடத்தில் இருக்கும் போது தான் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மதிப்பையும் பெறுவார்கள். இதை உணர்த்தும் வகையில் அக்காலத்தில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. என்னவென்று பார்க்கலாமா…

கவிஞர் வாலி பாடல்கள் எழுதுவதில் வல்லவர் என்று தான் நமக்குத் தெரியும். அவர் வாலிப உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வகையில் காதல் ரசனை மிக்கப் பாடல்களை எழுதுவதால் வாலிபக்கவிஞர் என்றும் அழைக்கப்பட்டார்.

ஆனால் அவருக்கு இன்னொரு திறமையும் உண்டு. அது ஓவிய ஆற்றல். இவர் அருமையாகப் படங்கள் வரைவாராம். ஒரு சமயம் ரயில் நிலையத்தில் பெருந்தலைவர் காமராஜரும், ராஜாஜியும் இருந்தார்களாம். அவர்களை சந்திப்பதற்காக அவர்கள் இருவரது ஓவியத்தையும் அவசர அவசரமாக வரைந்தாராம்.

Rajaji
Rajaji

அவர்களை ரயில் கிளம்புதற்குள் சென்று பார்த்து எப்படியாவது கையெழுத்தை வாங்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்துள்ளார். அந்த வகையில் முதலில் ராஜாஜியைப் போய்ப் பார்த்து தான் வரைந்த புகைப்படத்தைக் காட்டி கையொப்பம் கேட்டுள்ளார். அதை சற்று உற்றுப் பார்த்த ராஜாஜி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாராம்.

அதை வாங்கிப் பார்த்துள்ளார் வாலி. சற்றே தயங்கிய வாலி ஐயா, உங்களது கையொப்பம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் இது அப்படி இல்லையே என்று கேட்டாராம். அப்போது மெல்ல சிரித்த ராஜாஜி இப்படி சொன்னாராம். ஆமாம். நீ வரைந்த படம் கூடத் தான் என்னை மாதிரி இல்லை… நான் என்ன கேட்கவா செய்தேன் என்றாராம்.

அடுத்து பெருந்தலைவர் காமராஜரைப் போய் சந்தித்தார் வாலி. அவரிடமும் தான் வரைந்து எடுத்துச் சென்ற படத்தைக் காட்டி கையெழுத்துக் கேட்டுள்ளார். வாலி படத்தில் கையெழுத்து வாங்கியதும் சென்றுவிட்டார். அப்போது காமராஜருடன் இருக்கும் நண்பர்கள் ஐயா இந்தப் படம் உங்களைப் போல இல்லையே என்று ஆச்சரியத்துடன் கேட்டுள்ளனர்.

இதையும் படிங்க… நயன்தாரா தென்னகத்தின் லேடி சூப்பர்ஸ்டார் ஆனதன் ரகசியம் இதுதான்…! இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

அதற்கு பெருந்தலைவர் இப்படி சொன்னாராம். சின்ன பையன். இப்ப தான் வளர்ந்து வருகிறான். அவனோட மனது புண்படக்கூடாது அல்லவா…? அதனால் தான் மனநிறைவுடன் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன் என்றாராம் அந்தப் பெருந்தலைவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews