உங்க குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடமாட்டாங்களா!? இப்படி தோசை சுட்டு கொடுங்க !!


காய்கறிகள், கீரைகள், பழங்களில் ஏகப்பட்ட சத்துகள் இருக்கின்றது. அவற்றையெல்லாம் எடுத்து சொன்னாலும் குழந்தைகளுக்கு புரியாது. காய்கறிகளை சாப்பிடாமல் ஒதுக்கி வைப்பர். காய்கறிகளின் சத்துகள் குழந்தைகளுக்கு கிடைக்க சின்ன சின்ன முயற்சிகள் செய்யலாம். குழந்தைகளுக்கு பிடித்த தோசை, பூரி, போண்டா போன்றவற்றில் காய்கறிகளை கலந்து சமைத்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு தோசைன்னா ரொம்ப பிடிக்கும். அதனால் அவர்களுக்கு காய்கறிகளை சேர்த்து வெஜிடபிள் ஊத்தப்பம் செய்முறையை பார்க்கலாம்.

தேவையானவை:

இட்லி அரிசி – 300 கிராம்,

உளுந்து – 100 கிராம்,

உப்பு தேவையான அளவு,

கோஸ் துருவல்,

காரட் துருவல்,

பொடியாக நறுக்கிய குடமிளகாய் –

வெங்காயம் – தலா ஒரு கப்,

பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிது அளவு,

பச்சை மிளகாய் 1,

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, உளுந்தை தனித்தனியே ஊறவைத்து தோசைக்கு அரைப்பதுபோல் அரைத்து உப்பு சேர்த்து கலக்கவும். சிறிது எண்ணெயில் காய்கறிகளை லேசாக வதக்கிக்கொள்ளவும். காய்ந்த தோசைக் கல்லில் ஊற்றி, வதக்கிய காய்கறிகளில் சிறிது தூவி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரு பக்கமும் வேகவிட்டு எடுத்தால் சுவையான வெஜிடபிள் ஊத்தப்பம் ரெடி!

வதக்கிய காய்கறிகளை மாவில் கலந்தும் தோசை வார்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews