“குடும்பத்தையும் கொஞ்சம் பாருங்க உதயா“ : கணவருக்கு மனு போட்ட கிருத்திகா உதயநிதி

நடிகரும், அமைச்சருமான உதயதிநிதி ஸ்டாலினும், அவரது மனைவி கிருத்திகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போது இருவரும் காதல் வயப்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் காதலுக்கு முதல்வர் ஸ்டாலின் எந்த எதிர்ப்பும் காட்டவில்லையாம். ஆனால் மனைவி துர்கா ஸ்டாலின் சற்று பிடிவாதம் பிடிக்க மு.க.ஸ்டாலின் அவரைச் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஸ்டாலின்.

கடந்த 2002ல் உதயநிதி-கிருத்திகா திருமணம் நடந்தது. தற்போது இத்தம்பதியினருக்கு இன்பநிதி, தன்மயா ஆகிய இரு குழந்தைகள் இருக்கின்றனர். கிருத்திகா உதயநிதி திரைப்பட இயக்குநராக வலம் வருகின்றார். வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களையும் காகித ராக்கெட் என்ற வெப் சீரிஸையும் இயக்கி உள்ளார். உதயநிதியோ அரசியல், சினிமா என்று படு பிஸியாக வலம் வந்தார். ஆனால் அமைச்சரான பின் தற்போது நடிப்புக்கு இடைவெளி விட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கிருத்திகா உதயநிதி யூடியூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டியளித்தார். அதில் திருமணமான புதிதில் உதயநிதி குடும்பத்திற்காக அதிக நேரம் ஒதுக்கினார். அவ்வப்போது வெளியூர் சென்று வருவோம். ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது என்றார். மனைவியாக உதயநிதியிடம் நீங்கள் போடும் மனு என்னவென்று கேட்ட போது, குடும்பத்திற்காகவும் சற்று நேரம் ஒதுக்கக் கேட்பேன் என்று பதிலளித்தார்.

இது படம் இல்ல… பாடம்.. ஜிகர்தண்டா XX-ஐ தூக்கிக் கொண்டாடிய சீமான்

மேலும் நீங்கள் முதல்வரானால் எதை முதலில் செய்வீர்கள் என்ற கேள்விக்கு “சென்னையை மிகவும் சுத்தமாக நகரமாக மாற்றுவேன்“ என்று பதில் கூறினார். ஷுட்டிங் ஸ்பாட்களில் கூட சிறிய குப்பைகள் இருந்தாலே அதை முதலில் அகற்றச் சொல்லுவேன் என்றும் அந்தப் பேட்டியில் கூறினார். கிருத்திகாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆரம்ப காலகட்டங்களில் இவர்களின் காதலுக்கு உதயநிதியின் நெருங்கிய நண்பரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளார். இதுமட்டுமன்றி ஸ்டாலின் மகள் செந்தாமரையும் சபரீசனைக் காதல் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...