பெரியார், அண்ணா ரேஞ்சுக்கு TTF வாசனை புகழ்ந்த மஞ்சள் வீரன் இயக்குர் : வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

ஒரு யூடியூப் பிரபலத்திற்கு பின்னால் இவ்வளவு சர்ச்சைகளும், வாய்ப்புகளும் கிடைக்குமா என்றால் அது TTF வாசனுக்குத் தான் எனலாம். Twin throttlers என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்து ஆரம்பத்தில் பைக் ரைடிங் செய்து தனது வீடியோக்களை பதிவிட்டு வந்த TTF வாசனுக்கு இளம் ரசிகர்கள் பெருகினர்.

இதனால் அவர்களுடன் உரையாடுவது போலவும், பைக் ரைடிங் சாகசங்களில் ஈடுபடுவதையும், நெருக்கடியான சாலைகளில் அதிவேகமாகச் சென்று அதையும் வீடியோவாக பதிவேற்றி வெளியிட இவருக்கு இளம் வயதினர் ரசிகர்களாக பெருகினர். ஒருகட்டத்தில் TTF வாசன் எங்கள் பகுதிக்கு வருகிறார் என்றாலே திரை நட்சத்திரங்களைக் காண கூட்டம் கூடுவது போல் இவருக்கும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

சமூக வலைதளப் பக்கங்களிலும், பல யூடியூப் சேனல்களிலும் பேட்டி என்று பிஸியாக இருந்தவரை புரட்டிப் போட்ட சம்பவம் தான் பைக் விபத்து. கடந்த சில மாதங்களுக்கு முன் காஞ்சிபுரம் அருகே நான்குவழிச் சாலையில் அதிகவேகமாக பைக் ஓட்டி இவர் விபத்தில் சிக்க இவரது ரசிகர்கள் பதறினர்.

TTF 2

ஆனால் அதிர்ஷடவசமாக அவர் சிறு காயங்களுடன் உயிர்பிழைக்க காவல்துறை தனது அதிகாரத்தை கையில் எடுத்தது. TTF வாசனுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் பாய  கம்பி எண்ணத் தொடங்கினார். மேலும் அவரது டிரைவிங் லைசன்ஸ்-ம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாட பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டதால் TTF வாசன் மீண்டும் எப்போது வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கினர்.

வெளில சொன்னா அசிங்கமா போயிடும்… நடிப்புக்காக கே.எஸ்.ரவிகுமாரிடம் கெஞ்சிய படையப்பா பட நடிகை…

அதன்படி, TTF வாசன் புழல் சிறையிலிருந்து நேற்று ஜாமீனில் வெளிவந்தார். தினமும் இருவேளை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் வெளியே வந்தபோது ஆடி காரில் வந்து அவரை அழைத்துச் சென்றனர் ரசிகர்கள். இவ்வாறு யூடியூப்பில் பிரபலமான வாசனை இயக்குநர் செல்அம் தனது படத்தில் நடிக்க வைக்க தயாரானார். TTF வாசனும் ஹீரோவாக அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.

மஞ்சள் வீரனில் வாசன் கதாநாயகனாக நடிக்க ஷுட்டிங் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த நிலையில் தான் இவர் விபத்தில் சிக்கி பின்னர் சிறைக்குச் சென்றார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவர சிறை வளாகத்தில் அவரைச் சந்தித்த மஞ்சள் வீரன் இயக்குநர் செல்அம், ”பெரியார் பிறந்த தினத்திலே, அறிஞர் அண்ணா பிறந்த மண்ணிலே, வீழ்ந்த ஒருவன் இந்தத் தமிழ் மண்ணிலே மாபெரும் தலைவனாக வருவான் வெல்வான்” என்று அரசியல்வாதி ரேஞ்சில் வாசனைப் புகழ நேற்று சமூக வலைதளங்களில் இவரை கமெண்ட்களில் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.

மஞ்சள் வீரன் First Look போஸ்டர் அண்மையில் வெளியாகி TTF வாசன் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews